உள்ளூர் செய்திகள்

பொற்காசுகள் யாருக்கு

மன்னர் ஒருவர் தன்னிடமுள்ள ஆட்டின் பசியை நாள் முழுவதுக்குள் போக்கி வருபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக அறிவித்தார். ஆசைப்பட்ட ஒவ்வொருவரும் வந்து தினமும் ஆட்டினை அழைத்துச் செல்வார்கள். பசுமையான புல்வெளியில் மேயவிடுவர். மாலையில் மன்னர் முன் நிறுத்துவர். அவரோ பசுந்தழைகளை அதன் முன் காண்பிப்பார். அது ஆவலுடன் அதை தின்னும். போட்டியில் கலந்து கொண்டோர்கள் தோல்வியுற்றனர் என ஏளனம் செய்வார். கலந்து கொண்ட அனைவரும் வருத்தப்பட்டனர். இதை அறிந்த ஞானி ஒருவர் ஆட்டினை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அது மேயும் போது ஒரு குச்சி எடுத்து அதன் மீது ஒரு அடி அடிப்பார். அது மேய்வதை நிறுத்தும். மீண்டும் மீண்டும் அது மேயும் போது அவ்வாறே செய்வார். மாலையில் ஆடு முன் பசுந்தழைகளை காண்பித்தபோது பயத்தில் அதனை தின்ன மறுத்தது. ஆச்சரியப்பட்ட அவருக்கு பசுந்தழையை தின்பதே ஆட்டின் குணம் இதை தெரிந்து கொண்ட நீ போட்டியில் கலந்து கொண்டோர்களை ஏளனம் செய்தாய். அது தவறு என்பதை உணர்த்தவே ஆட்டிற்கு பயத்தை ஏற்படுத்தினேன். பொற்காசுகளை போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என சொல்லி விட்டு புறப்பட்டார் ஞானி.