உள்ளூர் செய்திகள்

வாழ்வு சிறக்க...

காட்டில் தனியாக இருந்தது தோழர் வீடு. இரவு நேரம் வீட்டின் கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்க... தோழர் கதவை திறந்தார். அங்கே நின்று கொண்டிருந்த ஒருவர் பசிக்கிறது என்றார். மனைவியிடம் அவருக்கு சாப்பிட ஏதாவது உள்ளதா எனக் கேட்டார். குழந்தைகளுக்காக மட்டுமே இரண்டு ரொட்டிகள் உள்ளன. அவற்றை கொடுப்போம் என்றார். அவருக்கு தண்ணீரும் ரொட்டியும் கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள். மறுநாள் காலையில் அதிகமான ரொட்டிகளும், கணிசமான தொகையும் அவரது வீட்டு வாசலில் இருந்தது. அதோடு இருந்த கடிதத்தில் ''சரியான நேரத்தில் தாங்கள் தந்த ரொட்டி எனதுயிரை காப்பாற்றியது நன்றி'' என எழுதப்பட்டிருந்தது. பசித்தவருக்கு உணவு அளியுங்கள் வாழ்வு சிறக்கும் என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழி தோழரின் மனக்கண்ணில் வந்தது. விழியில் நீர் பெருகியது.