எங்குள்ளது மகிழ்ச்சி
மிகுந்த சோகத்துடன் எதையோ பறி கொடுத்தவர் போல வந்தார் ஒரு பெரியவர். வழியில் அவரை சந்தித்த முல்லா ''என்ன நடந்தது'' எனக் கேட்டார். ''குடும்பம் இருந்தும் வாழ்க்கையில் பிடிப்பு இல்லை. என்னிடம் பணம் இருந்தும் மகிழ்ச்சி இல்லை என அவர் வைத்திருந்த பணப்பையை காட்டினார். அதனைப் பிடுங்கிக் கொண்டு ஓடத்தொடங்கினார் முல்லா. 'என்பணம், என்பணம் என்று அலறியவாறு அவரை தொடர்ந்தார் பெரியவர். முதுமை காரணமாக முல்லாவைப்பிடிக்க முடியவில்லை. தெருவோரத்தில் பணப்பை கிடப்பதைக்கண்டார். மகிழ்ச்சியுடன் பணப்பை கிடைத்து விட்டது என நினைத்தவாறு பணத்தை எண்ணிப்பார்த்தார் அப்படியே இருந்தது. மறைந்திருந்த முல்லா அவர் அருகில் வந்து ''இது தான் மகிழ்ச்சி அது ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது'' என்றார். குடும்பத்துடன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைத்தவாறே வீடு நோக்கி நடந்தார் பெரியவர்.