உள்ளூர் செய்திகள்

யார் சிறந்தவர்

நபிகள் நாயகம் பள்ளிவாசலில் அமர்ந்து தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக செல்வாக்கு மிக்க மனிதர் ஒருவர் சென்றார். உடனே தோழர்களிடம், ''இவர் குறித்து உங்களது கருத்து என்ன?'' எனக்கேட்டார். அதற்கு அவர்கள், ''இவர் சமூகத்தில் மேன்மையானவர். திருமணம் செய்வதற்காக இவர் பெண் கேட்டால் அனைவரும் பெண் கொடுப்பார்கள். இவர் யாருக்காவது பரிந்துரை செய்தால் அது உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் மிகவும் கஞ்சன்'' என்றனர். சிறிது நேரத்தில் மீண்டும் ஒருவர் சென்றதை பார்த்தவர், தோழர்களிடம் கருத்துக் கேட்டார். ''இவர் ஏழை. இவரது பேச்சிற்கு சமூகத்தில் மதிப்பு கிடையாது. ஆனால் ஒழுக்கமுள்ளவர், பிறருக்கு உதவுபவர்'' என்றனர். இதற்கு நபிகள் நாயகம், ''உண்மையில் இவரைப் போன்றவர்கள் இறைவனிடம் உயரிய மதிப்புக்கு உரியவர்கள். ஆனால் உம் கண்களுக்கு அது தெரியவில்லை. முதலில் சென்ற மனிதரைப் போன்றவர்களால் பூமி நிரப்பப்படுவதைவிட, இரண்டாவதாகச் சென்றவர் மிகவும் சிறந்தவர்'' என்றார்.