குழப்பவாதி யார்
“ நீங்கள் அறிஞர்களுக்கு பதிலாக குழப்பவாதிகளை அரண்மனையில் வைத்துள்ளீர்கள் என முல்லா கூறியதாக அவரது எதிரிகள் மன்னரிடம் பழி சுமத்தினர். முல்லாவை விசாரணைக்கு அழைத்தார் மன்னர். அங்கிருந்த அமைச்சர்களை காட்டி, 'இவர்களை குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே' எனக் கேட்டார். ஆளுக்கொரு தாளைக் கொடுத்த முல்லா, ''ரொட்டி என்பதன் பொருளை இதில் எழுதுங்கள்'' என்றார்.அனைவரும் எழுதிக் கொடுத்தனர். அதை மன்னர் படித்தார். அவற்றில் ரொட்டி என்பது சத்துள்ள பண்டம், உணவு, இறைவன் கொடுத்த கொடை, வேகவைத்த மாவுப் பொருள், மாவும் நீரும் சேர்ந்த கலவை, சுவையான பொருள் என பலவிதமாக குறிப்பிட்டு இருந்தனர். அது வரை பொறுமையுடன் இருந்த முல்லா, இந்த சாதாரண விஷயத்திலேயே இவர்கள் ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா? இதனால் தான் குழப்பவாதிகள் என்றேன் என்றார். முல்லாவின் அறிவைக் கண்டு வியந்த மன்னர் அவர் மீதுள்ள குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தார்.