உள்ளூர் செய்திகள்

அதிக சலுகை ஏன்

சீடர்களுக்கு அதிக சலுகை கொடுத்து அன்பாக இருந்தார் ஒரு ஞானி. சீடர்களைப் போல தன்னிடம் அன்பு காட்டவில்லையே என அவரது மகன் வருந்தினான். அதற்கான காரணத்தை தந்தையிடமே கேட்டான். அருகில் இருந்த சாக்கடையில் ஒரு பாத்திரத்தை எறிந்த ஞானி, ''அதை எடுத்து வா'' என கட்டளையிட்டார். ஆனால் மகன் அதை செய்யவில்லை. சிறிது நேரத்திற்கு பின் அங்கு வந்த சீடனிடம், ''சாக்கடையில் கிடக்கும் பாத்திரத்தை எடுத்து வா'' என்றார் ஞானி. தயக்கம் இன்றி சாக்கடையில் இறங்கி எடுத்தான் சீடன். அதை சுத்தப்படுத்தி கொடுத்தான். மகனைப் பார்த்த தந்தை, ''நான் ஏன் சீடர்களுக்கு சலுகை காட்டுகிறேன் என்பது இப்போது புரியுமே'' என்றார். மகனும் தலைகுனிந்து நின்றான்.