உழைத்து வாழ வேண்டும்
UPDATED : ஆக 04, 2022 | ADDED : ஆக 04, 2022
சந்தையில் உயர்ந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார் முல்லா. அப்போது அங்கிருந்தோரிடம், ''நண்பர்களே... யாருக்கெல்லாம் உழைக்காமல் சாப்பிடும் ஆசை உள்ளது. அதற்கான வழியை சொல்லவா?'' எனக்கேட்டார். இதைக்கேட்ட அனைவரும் கை துாக்கினர். உடனே முல்லா இறங்கி நடக்க ஆரம்பித்தார். அங்கிருந்த அனைவரும் கூச்சலிட்டனர். ''நமது ஊரில் என்னையும் சேர்த்து, எத்தனை சோம்பேறிகள் உள்ளனர் என அறிய விரும்பினேன். தற்போது பதில் கிடைத்து விட்டது'' எனச் சிரித்தார். யாராக இருந்தாலும் உழைக்காமல் வாழ விரும்பினால், இந்த கதிதான் நேரும்.