உலக நியதி
UPDATED : ஆக 23, 2022 | ADDED : ஆக 23, 2022
வீட்டின் கூரையை பழுது பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். அப்போது அந்த பக்கமாக வந்த முல்லா மீது, அந்த நபரோடு கூரை சரிந்தது. அவருக்கு காயம் ஏதுமில்லை. முல்லாவுக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விஷயம் அறிந்த பலர் ஆறுதல் கூற வந்தனர். அதில் ஒருவர், ''என்ன நடந்தது'' எனக் கேட்டார். ''எல்லாம் உலக நியதிப்படி தான் நடந்தது. குற்றம் செய்தவர் தப்பித்து விடுவார். ஆனால் நிரபராதி தண்டனையை அனுபவிப்பார். அது மாதிரி தான் கூரை மீதிருந்து விழுந்தவருக்குக் காயம் இல்லை. ஆனால் எனக்கு காயம் ஏற்பட்டது” என சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.