உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / கெலாட்டை அசைக்க முடியாது!

கெலாட்டை அசைக்க முடியாது!

'எங்கள் தலைவரை அவ்வளவு எளிதாக அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிட முடியாது...' என மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள். ராஜஸ்தானில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பின், 'முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், கட்சியில் இருந்து படிப்படியாக ஓரம் கட்டப்படுவார்...' என, செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால், அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.உத்தர பிரதேச மாநிலம், அமேதியில் சமீபத்தில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இது, காங்கிரசுக்கு செல்வாக்கான தொகுதி. ஆனால், கடந்த தேர்தலில் இங்கு ராகுலை, மத்திய அமைச்சரான பா.ஜ., வின் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். இதனால், இந்த முறை இங்கு போட்டியிடாமல் தவிர்த்த ராகுல், தங்கள் குடும்பத்தின் விசுவாசியான கிரோரி லால் சர்மாவை வேட்பாளராக அறிவித்தார். இவரை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு, அசோக் கெலாட்டிடம் தரப்பட்டது. தேர்தல் தோல்வியால் சோர்வடைந்திருந்த கெலாட், திடீரென உற்சாகம் அடைந்து, சுற்றி சுழன்று பணியாற்றினார். பா.ஜ.,வுக்கு எதிரான மனநிலை உள்ள சமூக தலைவர்களை எல்லாம் அழைத்து பேசி, காங்கிரசுக்கு ஓட்டளிக்கும்படி கூறினார். 'ஒருவேளை அமேதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அசோக் கெலாட் மீண்டும் ஒரு பெரிய ரவுண்டு வருவார். அவரை யாராலும் அசைக்க முடியாது...' என்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை