உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / இன்னும் எத்தனை பேரோ?

இன்னும் எத்தனை பேரோ?

குடும்பத்தில் இருந்து ஒருவரை வேட்பாளராக நிறுத்தினாலே, வாரிசு அரசியல் என விமர்சிக்கின்றனர். இந்த மனிதர், ஒட்டுமொத்த குடும்பத்தையும் களத்தில் இறக்கி விட்டுள்ளாரே...' என, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பற்றி பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள். பீஹாரின் மூத்த அரசியல்வாதியான லாலு பிரசாத் யாதவ், ஏற்கனவே அந்த மாநில முதல்வராக பதவி வகித்தவர். அவரது மனைவி ரப்ரி தேவியும் முதல்வராக இருந்துள்ளார். லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பீஹார் அமைச்சராகவும், இளைய மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளனர்.இது போதாதென, தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில், தன் மூத்த மகள் மிசா பார்தியை பாடலிபுத்திரா தொகுதியில் நிறுத்தி உள்ளார், லாலு. மிசா பார்தி, ஏற்கனவே இருமுறை இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.சரண் தொகுதியில், தன் இளைய மகள் ரோகிணியை களத்தில் இறக்கி விட்டுள்ளார், லாலு. இவர், திருமணம் முடிந்து சிங்கப்பூரில் வசிக்கிறார். ஆனாலும், குடும்பத்தின் செல்வாக்கை தக்க வைப்பதற்காக ரோகிணியை களம் இறக்கியுள்ளார் லாலு.பீஹாரில் உள்ள சக அரசியல்வாதிகளோ, 'லாலுவுக்கு ஏழு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களில் நான்கு பேர், இப்போது அரசியலில் உள்ளனர். அடுத்த தேர்தலுக்குள் இன்னும் எத்தனை பேரை களத்தில் இறக்கப் போகிறாரோ தெரியவில்லை...' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ