உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / செல்பி எடுத்தால் போதுமா?

செல்பி எடுத்தால் போதுமா?

'நடிகையை வேட்பாளராக நிறுத்தியது, நமக்கு தான் கூடுதல் சுமையாகி விட்டது...' என கவலைப்படுகின்றனர், ஹிமாச்சல பிரதேச மாநில பா.ஜ., நிர்வாகிகள். இங்கு முதல்வர் சுக்வீந்தர் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மண்டி லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக பிரபல நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார். இவர், ஹிமாச்சல் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், நடிகை என்பதாலும், இவரது பெயர் அறிவிக்கப்பட்டதுமே, இங்குள்ள பா.ஜ.,வினர், வெற்றி எளிதாகி விடும் என சந்தோஷப்பட்டனர். மண்டி லோக்சபா தொகுதி, காங்கிரசின் கோட்டை. முன்னாள் முதல்வரான, மறைந்த வீர்பத்ர சிங், இங்கு பலமுறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது இந்த தொகுதியின் எம்.பி.,யாக இருப்பவர், வீர்பத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங். இந்த தேர்தலில், மண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வீர்பத்ர சிங்கின் மகனும், மாநில அமைச்சருமான விக்ரமாதித்யா சிங் நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ.,வின் கங்கனாவோ, பாரம்பரிய உடையணிந்து வருவது, வாக்காளர்களுடன், 'செல்பி' எடுப்பது, நடனமாடுவது என, சினிமா படப்பிடிப்புக்கு செல்வது போல் பிரசாரம் செய்வதாக, கட்சி நிர்வாகிகள் பொருமுகின்றனர்.'போட்டி கடுமையாக இருக்கும்போது, தொகுதி முழுதும் பிரசாரம் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் கங்கனாவோ, 'செல்பி' எடுப்பதிலேயே நேரத்தை போக்கி விடுகிறார்...' என புலம்புகின்றனர், பா.ஜ., நிர்வாகிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ