உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / எல்லை மீறிய பேச்சு!

எல்லை மீறிய பேச்சு!

'கூட்டணி கட்சிகளால் பெரிய தொல்லையா போச்சு...' என புலம்புகிறார், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத். உ.பி.,யில் இன்னும் ஒரு கட்ட தேர்தல் நடக்க வேண்டியுள்ளது. இந்த தேர்தலும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக நடந்து முடிந்து விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார், முதல்வர் யோகி ஆதித்யநாத். ஆனால், அவரது ஆசைக்கும், ஆர்வத்துக்கும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர், பா.ஜ., கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் தலைவர்கள். இங்கு, 'சல்தேவ் பாரதிய சமாஜ்' என்ற ஒரு கட்சி உள்ளது. இதன் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர். இவரது கட்சிக்கு, உ.பி.,யின் ஒரு சில மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளது. இதனால், இவர்களை கூட்டணியில் சேர்த்து உள்ளது, பா.ஜ.,சமீபத்தில், ஒரு கூட்டத்தில் பேசிய ஓம் பிரகாஷ் ராஜ்பர், 'பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியினர், எதிர்க்கட்சியினர் செல்லும் வாகனங் களை சோதனையிட்டு, அவர்களிடம் பணம் இருந்தால், அதை பறிமுதல் செய்ய வேண்டும். 'அவர்களிடமிருந்து, 10 லட்சம் ரூபாயை கைப்பற்றினால், அதில் ஒரு லட்சத்தை மட்டும் தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு, மீதமுள்ளதை, நம் தேர்தல் செலவுக்கு வைத்துக் கொள்ளலாம்...' என பேசினார். இவரது பேச்சை, 'வீடியோ' எடுத்து, தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர் எதிர்க்கட்சியினர். 'கூட்டணி கட்சியினர் இப்படி எல்லை மீறி பேசுகின்றனரே...' என கவலைப்படுகிறார், யோகி ஆதித்யநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Aroul
மே 28, 2024 14:59

நாங்கள் அறிவாளிகள் என கூறிக்கொள்ளும் மாநிலங்களில் அவ்வாறுதான் நடக்கிறது.


Suriyanarayanan
மே 28, 2024 08:11

இரு துறைகள்காவல், போக்குவரத்து சாமா தானம் செய்து உள்ளார்கள் மிக்க மகிழ்ச்சி அதுபோல் இந்து அறநிலையத்துறையும் வருவாய் துறையும் பத்திர பதிவு துறை யும் சேர்ந்து பணியாற்ற இவர்கள் செய்ய வேண்டும் சென்னை திருநீர்மலை பகுதியில் உள்ள ஜெயின் ஆல்பின் மெடோஸ் அபார்ட்மெண்ட் பல்லாவரம் சுமார் 700 குடும்பங்கள் எதிர்காலம் கேள்வியாக உள்ளது. வங்கிகள் கடன் வழங்கியும், அவசர தேவைக்கு அபார்ட்மெண்ட் விற்க முடியாத நிலை உள்ளது. இதில் அரசுக்கு வருமானம் இழப்பு என்பதையும் இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நடந்தது நடந்தவைகளாக இருக்கட்டும்....இனி நடப்பது பாமர மக்களுக்கு நல்லது நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை