உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / இது தான் நிலைமையா?

இது தான் நிலைமையா?

'கொஞ்சம் செல்வாக்கு இழந்து விட்டால், ஆளாளுக்கு விமர்சிக்கின்றனரே...' என, கோபத்தில் உள்ளார், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், உ.பி., யில் பா.ஜ.,வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த தோல்வி, மத்தியில் பா.ஜ., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்குமுட்டுக்கட்டையாகி விட்டது என பரவலாக பேசப்படுகிறது.இந்த தோல்விக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்மீது பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பா.ஜ.,வில் உள்ள மூத்த தலைவர்களே, 'தேர்தலுக்கு சரியாக வியூகம் அமைக்க ஆதித்யநாத் தவறி விட்டார்...' என்கின்றனர்.இந்த நேரம் பார்த்து, மத்திய குடும்ப நலத்துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான அப்னா தளம் - எஸ் கட்சியின் தலைவருமான அனுப்ரியா படேலும், ஆதித்யநாத்தை கடுமையாக தாக்கிப் பேசத் துவங்கியுள்ளார். உ.பி.,யின் ஒரு சில தொகுதிகளில் அனுப்ரியாவின் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே அனுப்ரியாவுக்கும், ஆதித்யநாத்துக்கும் மோதல் உண்டு. சமீப காலமாக ஆதித்யநாத்தின் திட்டங்களை அனுப்ரியா விமர்சிக்க துவங்கியுள்ளார்.'குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலங்களை, மீண்டும் அரசே கையகப்படுத்துவது மக்கள் விரோததிட்டம்' என அவர் கடுமையாக சாடியுள்ளார்.ஆதித்யநாத் ஆதரவாளர்களோ, 'சக்திவாய்ந்த அரசியல் தலைவருக்கு கூட சற்று சரிவு ஏற்பட்டால், இது தான் நிலைமை போலிருக்கிறது...' என, கவலைப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை