உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / கட்டெறும்பான கதை...!

கட்டெறும்பான கதை...!

'இந்த நெருக்கடிகளை சமாளித்து தேர்தலை சந்திப்பது பெரிய வேலையாக இருக்கும் போலிருக்கிறதே...' என பெருமூச்சு விடுகிறார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமுல் காங்., தி.மு.க., உட்பட, 28 கட்சிகள் ஒருங்கிணைந்து, 'இண்டியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே, கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடந்து வருகிறது. ஆம் ஆத்மி தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.ஹரியானா, புதுடில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு இருப்பதால், அங்கு ஒரு சில இடங்களை மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்க முடியும் என, அந்த கட்சி தலைவர்கள் பிடிவாதமாக கூறுகின்றனர். மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள, 42 தொகுதிகளில் காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகளை மட்டுமே விட்டுத் தர முடியும் என, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் என, இரண்டு பெரிய கட்சிகள் கூட்டணியில் இருப்பதால், காங்கிரசுக்கு மூன்று தொகுதிகளுக்கு மேல் தருவது சிரமம் என, கூறுகின்றனர். இதனால், கவலையில் ஆழ்ந்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, 'ஒரு தேசிய கட்சி என்ற மரியாதையே நமக்கு இல்லையே... கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விடும் போலிருக்கிறதே...' என, புலம்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை