உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்எதிரொலிக்கு காரணம்காற்றில் ஒலியின் வேகம் வினாடிக்கு 1080 அடி. ஒலியலைகள் சற்றுத் தொலைவில் உள்ள ஏதோ ஒரு பொருளின் மீது மோதி நமது திசை நோக்கிப் பிரதிபலிப்பதே எதிரொலி. அதாவது ஒலிபடும் பொருள், ஒலியைக் கிரகிக்கும் தன்மை இல்லாமல் பிரதிபலிக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். பிரதிபலிக்கும் பொருள் நம்மிடம் இருந்து பொதுவாக 56 அடிக்கு தொலைவில் இருந்தால் தான் எதிரொலி கேட்க வாய்ப்பு உருவாகும். மலைப்பகுதிகளில் சத்தமிடும்போது பாறை போன்றவை 56 அடிக்கு அடுத்து இருப்பதால் அதன் மீது பட்டு ஒலி எதிரொலிக்கிறது.தகவல் சுரங்கம்எப்போதும் தண்ணீர்அதிக ஆழம் இல்லாத, பரந்து விரிந்து காணப்படும் நீர்நிலை பகுதி தான் சதுப்பு நிலம். இது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் காணப்படும். சிறு தாவரங்கள், நீர்வாழ் விலங்குகள், உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக உள்ளது. பெரும்பாலும் கடலோரப் பகுதிகளில் அமைந்திருக்கும். இவை நிலத்தடி நீர் வளத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. மழைக்காலங்களில் அதிகளவில் நீரை தக்கவைத்துக்கொண்டு வெள்ளப் பாதிப்புகளை தடுக்கிறது. பழவேற்காடு, பள்ளிக்கரணை, பிச்சாவரம், கோடியக்கரை போன்றவை தமிழகத்தில் உள்ள முக்கிய சதுப்பு நிலப்பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ