| ADDED : ஏப் 02, 2024 06:29 PM
அறிவியல் ஆயிரம்சூரிய கிரகணம் தெரியுமாவரும் ஏப். 9ல் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இது இந்திய நேரப்படி ஏப். 9 இரவு 9:13 முதல் ஏப். 10 அதிகாலை 2:22 வரை நீடிக்கிறது. ஆனால் இது இந்தியாவில் தெரியாது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் மட்டுமே முழுமையாக தெரியும். இருப்பினும் கரீபியன், கொலம்பியா, வெனிசுலா, ஸ்பெயின், பிரிட்டன், போர்ச்சுகலில் பகுதி நேர சூரிய கிரகணம் தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் வரும்போது, சந்திரன் நடுவில் இருந்து சூரிய ஒளியை மறைப்பதால் அதன் நிழல் பூமி மீது விழுகிறது. இதுவே சூரிய கிரகணம்.தகவல் சுரங்கம்நீளமான சுரங்கச்சாலைஉலகின் நீளமான சுரங்கச்சாலை நார்வேயில் உள்ளது. இதன் பெயர் 'லியர்டல்'. இது லியர்டல் - ஆர்லேன்ட் பகுதியை இணைக்கிறது. மலையை உடைத்து அமைத்துள்ள இச்சாலையின் நீளம் 24.51 கி.மீ. அகலம் 30 அடி. சாலையின் அதிகபட்ச உயரம், சராசரி கடல்நீர் மட்டத்தில் இருந்து 869 அடி. குறைந்தபட்ச உயரம் 16 அடி. இச்சாலையில் தினமும் 2050 வாகனங்கள் கடக்கின்றன. கட்டுமானப்பணி 1995ல் தொடங்கி 2000ல் திறக்கப்பட்டது. இப்பட்டியலில் இரண்டாவது நீளமானது ஜப்பானின் யாமேட் சுரங்கச்சாலை. நீளம் 18.20 கி.மீ.