உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்யுரேனஸ் கோளில் மீத்தேன்சூரியனில் இருந்து ஏழாவது கோளாக யுரேனஸ் உள்ளது. இது ஹீலியம், ஹைட்ரஜனால் ஆன பனிக்கோள் என ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆராய்ச்சிகள் தெரிவித்திருந்தன. இதனால் இது நீலநிறக்கோள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் யுரேனஸ் கோளில் 10 சதவீதம் மீத்தேன் வாயுவும் உள்ளது என இஸ்ரேல் பல்கலை, கலிபோர்னியா பல்கலை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 260 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. இக்கோளை ஆய்வு செய்த ஒரே விண்கலம் 1980ல் அமெரிக்கா அனுப்பிய 'வொயாஜர் 2' விண்கலம்.தகவல் சுரங்கம்சர்வதேச போலீஸ்'இன்டர்போல்' எனும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்பு நுாற்றாண்டுகளை கடந்தது. 1923 செப்.7ல் தொடங்கப்பட்டது. நாடு கடந்த குற்றம், பயங்கரவாதம், சைபர் கிரைம் உள்ளிட்ட பிரிவுகள் மீது நடவடிக்கை எடுப்பதே இதன் முக்கிய நோக்கம். குற்றங்களை பொறுத்து சிவப்பு, ஊதா, பச்சை, மஞ்சள், கருப்பு, ஆரஞ்சு, பழுப்பு என 7 நிறங்களில் அறிவிப்பு வெளியிடும். இதன் தலைமையகம் பிரான்சின்லியான். தவிர உலகளவில் 7 கிளைகளும் உள்ளன. இதில் 190 நாடுகள் உறுப்பினராக உள்ளன. 2019ன் படி, 1050 பேர் பணியாற்றுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ