உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்இடத்தின் உயரம் கணக்கிடும் முறைபூமியில் ஒரு இடத்தின் உயரம், சராசரி கடல்நீர் மட்டத்தை அடிப்படையாக வைத்து குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக எவரெஸ்ட் சிகரம், சராசரி கடல்நீர் மட்டத்தில் இருந்து 29,029 அடி உயரத்தில் உள்ளது என குறிப்பிடப்படுகிறது. குளம், ஏரி, கண்மாய்களில் நீர் மட்டம் சலனமற்று இருக்கலாம். ஆனால் கடலில் சில சமயம் பெரிய அலைகளும் இருக்கும். எல்லா நேரங்களிலும், இடங்களிலும் கடல்நீர்மட்டம் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதற்கு காரணம் பூமி மீது நிலவு செலுத்தும் ஈர்ப்பு சக்தி. காற்று. இதனால் தான் சராசரி கடல்நீர் மட்டம் என குறிப்பிடப்படுகிறது.தகவல் சுரங்கம்மத்திய கலால் வரி தினம்நம் நாட்டுக்குள் தயாரிக்கப்படும் பொருட்கள், உற்பத்தியின் மீது விதிக்கப்படுவது கலால் வரி. தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ள பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் போது, தயாரிப்பாளரால் இந்த வரி செலுத்தப்படும். கலால் வரித்துறை ஊழியர்களை ஊக்குவிக்க பிப். 24ல் தேசிய கலால் வரி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1944 பிப்.24ல் மத்திய கலால், உப்பு வரி சட்டம் உருவாக்கப்பட்டது. இது 1966ல் மத்திய கலால் வரி சட்டம் என பெயர் மாற்றப்பட்டது. நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் மத்திய கலால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை