உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்பூமி சுழற்சி தினம்சூரியன் தினமும் சுற்றுகிறது. ஆனால் ஜன. 8ல் பூமி சுழற்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பூமி தன் சுற்றுவட்டப்பாதையில் சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. தன்னைத்தானே ஒருமுறை சுற்றுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என 1851ல் முதன்முதலாக உலகிற்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டியவர் பிரான்ஸ் விஞ்ஞானி லியோன் பவுல்காட். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இத்தினம் உருவாக்கப்பட்டது. ஒளியின் வேகத்தை கண்டறிந்தவரும் இவரே.தகவல் சுரங்கம்ஆழமான ஆறுஉலகின் மிக ஆழமான ஆறு என 'காங்கோ ஆறு' அழைக்கப்படுகிறது. இதன் அதிகபட்ச ஆழம் 720 அடி. இதன் நீளம் 4700 கி.மீ. இதற்கு 25 துணை ஆறுகள் உள்ளன. இது 'ஜயர்' ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. 'நைல்' நதிக்கு அடுத்து ஆப்ரிக்காவின் நீளமான ஆறு இதுதான். அதே போல அமேசான் ஆறுக்கு அடுத்து, உலகில் அதிகளவில் தண்ணீர் ஓடும் ஆறு இதுவே. இந்த ஆற்றின் வழித்தடங்களில் 40 நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆப்ரிக்காவின் மொத்த நிலப்பரப்பில் 13% பகுதியில் (40 லட்சம் சதுர கி.மீ.,) இந்த ஆறு பாய்கிறது. அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ