உருகிய பனிப்பாறைகிரீன்லாந்தில்
1985ல் இருந்து இதுவரை 5090 சதுர கி.மீ., பரப்பளவிலான பனிப்பாறை படலம்
உருகியுள்ளது. இது லண்டன் நகரின் மூன்று மடங்கு பரப்பளவுக்கு சமம் என
அமெரிக்காவின் நாசா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்தில்
பனிப்பாறை தொடர்பாக எடுக்கப்பட்ட 2.30 லட்சம் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு
செய்ததில் இது கண்டறியப்பட்டது. 40 ஆண்டுகளில் 1034 லட்சம் கிலோ எடை
பனிப்பாறை உருகிவிட்டது. இது கடல் நீர்மட்டம், வானிலை அமைப்பு,
சுற்றுச்சூழல், உணவுப்பாதுகாப்பில் ஆபத்தை ஏற்படுத்தும் என ஆய்வு
எச்சரித்துள்ளது.தகவல் சுரங்கம்
அதிக எல்லைகள் கொண்ட மாநிலம்இந்தியாவில்
28 மாநிலம், 8 யூனியன் உள்ளன. இதில் அதிக மாநிலங்களை எல்லைகளாக
கொண்டது உத்தரபிரதேசம். இது டில்லி (யூனியன்), ஹரியானா,
ஹிமாச்சல், உத்தரகண்ட், பீஹார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான்,
மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 9 மாநிலங்களை எல்லையாக
கொண்டுள்ளன. மக்கள் தொகை, மாவட்டங்கள், சட்டசபை, லோக்சபா தொகுதி
எண்ணிக்கையில் உ.பி., தான் பெரியது. பரப்பளவில் மட்டும் ராஜஸ்தான்,
மத்தியபிரதேசம், மகாராஷ்டிராவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் உள்ளது.