உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / உண்மையின் ஒளியாக தொடரட்டும் தினமலர் வெற்றிப் பயணம்!

உண்மையின் ஒளியாக தொடரட்டும் தினமலர் வெற்றிப் பயணம்!

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக திகழும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில், உண்மை, நேர்மை, பொறுப்பு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட பாரம்பரிய நாளிதழ் என்ற பெருமையைப் பெற்றுள்ளது 'தினமலர்'. தவறுகளைத் துணிச்சலுடன் சுட்டிக்காட்டும் 'தினமலர்', நன்மைகளையும், நல்ல திட்டங்களையும் பாராட்டத் தவறுவதில்லை. பத்திரிகை தர்மத்தின் படி, அறம் மற்றும் சமூக நலனை முன்னிறுத்தி, நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்திகளை தருவதோடு, அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில், முன்னோடியாக திகழ்கிறது. நீர்நிலைகளை பாதுகாப்பது முதல் இன்று நவீனமாகியுள்ள கோவையின் வளர்ச்சியிலும் 'தினமலர்' நாளிதழின் பங்களிப்பு இருந்து வருகிறது. தனது பேனாவின் முனையை கூராக்கி, பல மாற்றங்களை கொடுத்து பவள விழா காணும் 'தினமலர்' நாளிதழ் 75 ஆண்டுகளை கடந்து, உயர்ந்து நிற்பது என்பது சாதனை மட்டுமல்ல, வரலாறு. இந்த சாதனைப் பயணத்தின் பின்னணியில் உழைக்கும் பதிப்பாளர், ஆசிரியர், பணியாளர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நுாற்றாண்டுகள் கடந்தும் உண்மையின் ஒளியாக தொடரட்டும், 'தினமலர்' வெற்றிப் பயணம். அன்புடன், எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க., கொறடா மற்றும் முன்னாள் தமிழக அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை