உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / நான்கு ஆண்டுகளாக வீணாகிய குடிநீர்: தினமலர் செய்தியால் தீர்வு

நான்கு ஆண்டுகளாக வீணாகிய குடிநீர்: தினமலர் செய்தியால் தீர்வு

குன்னுார் : குன்னுாரில் மெயின் குழாய் உடைந்து, 4 ஆண்டுகளாக வீணாகி வந்த குடிநீர் குழாய் 'தினமலர்' செய்தி எதிரொலியால் சரி செய்யப்பட்டது.குன்னுார் நகராட்சி, 30 வார்டுகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும், 43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணை வறண்ட நிலையில், எமரால்டு கூட்டு குடிநீர் திட்டமும் பாதிக்கப்பட்டதால், 10 நாட்களுக்கு பிறகு ஒரு நாள் மட்டும் குடிநீர் வழங்கப்பட்டது.இந்நிலையில், குன்னுார் ஐ.டி.ஐ., சாலையில், மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. 4 ஆண்டுகளாக இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது தொடர்பாக, கடந்த மாதம், 25ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் நகராட்சியின் மூலம் சரி செய்யும் பணிகள் நடந்தன. 20 நாட்களாக நடந்த பணி நிறைவு பெற்றது. இதனால், பகுதிக்கு செல்ல வேண்டிய குடிநீர் வினியோகம் சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்