உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு பல்வேறு வழக்குகளை போட்டுள்ளது. தண்ணீரை தேக்கி நாங்கள் தருகிறோம் என, அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. எந்த அணியில் நாங்கள் இருந்தாலும், தாய்க்கும், பிள்ளைக்கும், வயிறு வேறு தான். மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், அணை கட்ட முடியாது. அவர்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, நமக்கும் உரிமை உள்ளது.டவுட் தனபாலு: காங்., தலைவர்களான சோனியா, ராகுலிடம் உங்க தலைவர் ஸ்டாலின் ரொம்ப நெருக்கமா இருக்காரு... அவங்களிடம், 'கர்நாடக காங்கிரசாரை அடக்கி வைங்க'ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா, பிரச்னை முடிஞ்சிடுமே... அதுல உங்களுக்கு என்ன தயக்கம் என்ற, 'டவுட்' வருதே!பா.ஜ., தேசிய தலைவர் நட்டா: நாட்டின் ஜனநாயகத்துக்கு பேராபத்தாக இருப்பது வாரிசு அரசியல். இந்த வாரிசு அரசியலின் பிரதிநிதியாகத் தான் ராகுல் செயல்படுகிறார். தடை செய்யப்பட்ட அமைப்புகள், காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதும் ஆபத்தான விஷயம்.டவுட் தனபாலு: வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு கேடு என்பதில், 'டவுட்'டே இல்லை... ஆனா, கர்நாடகாவில் உங்க கட்சியின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., பார்லிமென்ட் குழு உறுப்பினரா இருக்காரு... அவரது மூத்த மகன் ராகவேந்திரா எம்.பி.,யா இருக்காரு... இளைய மகன் விஜயேந்திரா எம்.எல்.ஏ., பிளஸ் மாநில பா.ஜ., தலைவரா இருக்காரு... இதெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா என்ற, 'டவுட்' வருதே!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகம், புதுச்சேரியில் மவுன புரட்சி நிலவுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பா.ஜ., கூட்டணி வேட்பாளர்கள், 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவர்; மூன்றாம் முறையாக மோடி பிரதமராவார்; மாற்றம் நிச்சயம் வரும். இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய வெற்றியை பெரும். பா.ம.க., போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெறும்.டவுட் தனபாலு: மவுன புரட்சி, உங்க அணிக்கு வெற்றி தேடி தந்தால் சந்தோஷம் தான்... உங்க கணிப்பின்படியே 40க்கு 40லயும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றாலும், உங்க கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிட்டுமா என்பது, 'டவுட்'தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

M Ramachandran
ஏப் 21, 2024 20:11

சகல தில்லு முள்ளும் இந்த தேர்தலில் நடந்துள்ளது ஒட்டர்கள் லிஸ்டில் காணமால் போபட நாதைய்ய பற்றி குறித்து தீ மு கா எதிர்ப்பு தெரிவிக்க வில்லய்யேன்றால் அதன் சூட்ச்சுமம் தெரிகிறது


M Ramachandran
ஏப் 21, 2024 20:08

சென்னையில் வயதானவர்கள் ஓடெர்லிஸ்ட்டில் இருந்து குடும்பத்தில் இருவர் என்றால் ஒருவர் பெயர் இருக்காது ஏன்னா வித்தை இது சென்ற தேர்தலில் ஒட்டு அளித்தவர்களுக்கு இப்படி எப்படி நீக்கு கிறார்கள் வீட்டிற்கு அந்த சரி பார்பதில்லை பார்க்காமல் நீக்குவது இது அயோக்கிய தணாமாகா அரசியல் மாறி விட்டது


M Ramachandran
ஏப் 21, 2024 20:05

எப்பா தில்லு முல்லுகள் கோவையில் ,, வாக்குகள் ஸ்வாகா இந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலே நேரமை தூரா ஓடி விடும்


M Ramachandran
ஏப் 21, 2024 20:02

உங்கள் டிராமா வெல்லாம் பழசு கையாலாகாத்தனத்திற்கு தீ மு கா என்ற பெயர் கண்துடைப்பாகா டில்லிக்கு கடிதம் எழுதுவது கருணாநிதி காலத்திலிருந்து காங்கரஸ் காட்சியய்ய்ய தட்டி கேஆட்கா துப்பில்லை


Manikandan
ஏப் 21, 2024 14:20

அருமை


VENKATASUBRAMANIAN
ஏப் 21, 2024 08:28

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம் ஆனால் கட்சியே வாரிசுகளிடம் இருக்க கூடாது அதற்கு திமுக காங்கிரஸ் ஆர்ஜெடி ஆம்ஆத்மி உதாரணம்


D.Ambujavalli
ஏப் 21, 2024 07:06

ஒவ்வொரு கட்சியிலும் உள்ள வாரிசு ஆட்சியாளர்களை கணக்கிட்டு பிறகு இந்த 'ஒழிக்கும்' பிரசாரம் செய்யவும் தொண்ணூறு வயதுவரை, நடமாடக்கூட முடியாவிடில் பதவியில் இருப்பதும், சொந்த கம்பெனிகள் போல, தனக்கு பின் மகன், மகள், என்று நியமனம் செய்வதில் யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை


darani
ஏப் 21, 2024 06:31

In dmk party president, youth wing president, lady wing president, belong to one family and multiple minister sons are mla or mp Can you show like this in BJP


புதிய வீடியோ