உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்: மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன், கர்ப்பிணியருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. பயனாளர்களின் பட்டியலை உறுதிப்படுத்துவதற்கு காலதாமதம் ஆகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ஜூன் 6க்கு பின், மத்திய அரசு அதிகாரிகளோடு பேசி, விரைவாக நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.டவுட் தனபாலு: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தரலைன்னாலும், மாநில அரசு நிதி ஒதுக்கீடு பண்ணி, மளமளன்னு வேலைகள் நடக்குதே... அதே பார்முலாவை, கர்ப்பிணியர் உதவித்தொகைக்கும் கடைப்பிடித்தால் என்ன...? அது சரி... மெட்ரோ திட்ட கான்ட்ராக்ட்ல கமிஷன்கள் தேறும்... கர்ப்பிணியர் உதவித்தொகையில தம்பிடி தேறாது என்பதால், தாமதம் பண்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: தேர்தல் பிரசாரத்தில் நான் பங்கேற்க கூடாது என பா.ஜ., நினைத்தது. என்னை பார்த்து அக்கட்சி அஞ்சி நடுங்குகிறது. அதனால் தான் என்னை சிறையில் அடைத்தது. இந்த தேர்தலில், அக்கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.டவுட் தனபாலு: டில்லியிலும், பக்கத்துல இருக்கிற பஞ்சாபிலும் தான் உங்க கட்சியின் ஆட்சி நடக்குது... மற்ற மாநிலங்கள்ல உங்க கட்சி, 'லட்டர் பேடு' அளவில் தான் செயல்படுது... அப்படி இருக்கிறப்ப, நாடு முழுக்க பரவியிருக்கிற தேசிய கட்சியான பா.ஜ., உங்களை பார்த்து பயப்படுது என்பதை, உங்க மனைவியே நம்புவாங்களா என்பது, 'டவுட்'தான்!தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தி.மு.க., அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதோடு, வழிகாட்டி மதிப்பை, 33 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க.,வுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், வருமானத்திற்குமே இந்த நடவடிக்கை என்று தெரிகிறது. பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து, தி.மு.க.,வுக்கு எந்த அக்கறையும் இல்லை.டவுட் தனபாலு: பொதுமக்கள் மீதான அக்கறை எல்லாம், தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தான், ஆளுங்கட்சிக்கு வரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 16, 2024 06:34

இவர்கள் தேர்தல் முடிந்து மத்தியில் நிதி வாங்கும் முன்பு எத்தனை கர்ப்பிணிகள் அதிகரிப்பாரோ, எத்தனைபேர் பிரசித்துவிடுவரோ ‘வருமானம்’ பார்க்க முடியாத துறைகள் எல்லாம் பெயரளவுக்குத்தான் இருக்கின்றன