உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: திராவிட கட்சிகளை விமர்சித்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தற்போது தி.மு.க.,வையும், கருணாநிதியையும் புகழ்ந்து பேசி மாட்டி கொண்டார். அரசியலில்அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என, மீண்டும் நிரூபணம்ஆகி உள்ளது. அரைவேக்காட்டுத்தனமாக அவர் பேசி வருகிறார்.டவுட் தனபாலு: கொஞ்ச நாளைக்கு முன்னாடி, மக்களுடன்,ராகுல் எளிமையாக பழகும் வீடியோவை உங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, 'நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்'னு ஒரு பதிவு போட்டீங்களே... கட்சி தலைமை யிடம், 'குட்டு' வாங்கியதும், பட்டுன்னு அந்த பதிவை நீக்கியது முழு வேக்காட்டுத்தனமா என்ற, 'டவுட்' வருதே!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்: அத்திக்கடவு - அவிநாசிதிட்டத்தில், அ.தி.மு.க., ஆட்சியில்,90 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், அடுத்து ஆட்சிக்குவந்த தி.மு.க., கடந்த மூன்று ஆண்டில், மீதம் இருந்த 10 சதவீத வேலைகளை கூட முடிக்காமல் காலம் கடத்தியது.தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததும், வேண்டா வெறுப்பாக மீதமுள்ள பணிகளை முடித்து, திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். திட்டத்துக்கான பெருமை அ.தி.மு.க.,வை மட்டுமே சேரும்.டவுட் தனபாலு: அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம்அறிவித்த பின்தான், திட்டத்தை தி.மு.க., அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்குது... அந்த வகையில், முழு பெருமையும் பா.ஜ.,வுக்கு தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி: எம்.ஜி.ஆர்.,- ஜெ., வழியில் கட்சியை பழனிசாமி காப்பாற்றி வருகிறார்.தற்போது, கட்சி சோதனையில் உள்ளது; அதை காப்பாற்ற, ஒவ்வொரு தொண்டனும் பாடுபட வேண்டும். அதனால், தொண்டர்களின் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன்... நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால், 2026ல் பழனிசாமியை முதல்வராக்கலாம். உங்களோடு நான் இருக்கிறேன்; எங்களோடு நீங்கள் இருங்கள். டவுட் தனபாலு: இப்ப எல்லாம்தொண்டர்களோடு தான் இருக்கீங்க; இருப்பீங்க... ஆனா, ஆட்சிக்கு வந்து, அமைச்சராகிட்டா, தொண்டர்களை வீட்டு வாசல் பக்கம் கூட சேர்க்க மாட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 23, 2024 16:45

'காரியம் ஆக வேண்டுமென்றால் தான் தொண்டர்கள் நினைவுக்கு வருவார்கள் பாவம் , அந்த ஜீவன்களும், பிரியாணி, க்வார்ட்டருடன் வாழ்க்கையை முடித்துக்கொண்டு விடுவார்கள்


சமீபத்திய செய்தி