உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ.வினரிடம் கட்டிங் கேட்ட குடிமகன்

மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ.வினரிடம் கட்டிங் கேட்ட குடிமகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கும்பகோணம்: கள்ளக்குறிச்சியில் சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதை கண்டித்து, பா.ஜ.,வினர் தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன் 22) ஆர்பாட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பா.ஜ.,வினர் மோரி வாய்க்கால்களில் மதுவை கீழே கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, மது பாட்டிலில் இருந்து மதுவை கீழே கொட்டுவதை பார்த்த குடிமகன் ஒருவர், கீழே கொட்டுவதற்கு பதிலாக என்னிடம் கொடுக்குமாறு நீண்ட நேரமாக பா.ஜ.,வினரிடம் போராடினார். இதையடுத்து யாரையும் திருத்த முடியாது என தலையில் அடித்துக் கொண்டபடி, அவருக்கு 'கட்டிங்கை' கொடுத்து பா.ஜ., வினர் வழி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி நகைப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை