உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / உயிருக்கு போராடும் இளம்பெண்

உயிருக்கு போராடும் இளம்பெண்

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் கிராமம் காளியம்மன் நகரைச் சேர்ந்த மணியரசு மனைவி வேம்பு, 25. எட்டு மாதத்துக்கு முன், திடீரென கழுத்தில் கொப்பளம் ஏற்பட்டது. பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கொப்பளம் நாளடைவில் பெரிதாகி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.கட்டிக்கான பரிசோதனைக்கு, 18,000 ரூபாய் தேவைப்படும் நிலையில், அடையார் புற்றுநோய் மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், நிலைமை மோசமாக வேம்புவை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். பாதிப்பு அதிகரித்து, அவரால் உணவு சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் முடியவில்லை. உயிருக்கு போராடும் இளம்பெண்ணை உயர் சிகிச்சை அளித்து காப்பாற்ற முதல்வர் உதவ அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்புக்கு: 63799 82406.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ