மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
03-Oct-2025 | 1
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
காத்மாண்டு, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், இளம்வயதில் ஏறிய இந்தியர் என்ற பெருமைக்குரிய, 16 வயதான காம்யா கார்த்திகேயனை, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா நேற்று கவுரவித்தார்.நம் அண்டை நாடான நேபாள எல்லையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம், கடல் மட்டத்தில் இருந்து, 29,000 அடி உயரம் உடையது. இது, உலகிலேயே மிக உயரமான சிகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதன் மீது முதன்முறையாக நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கே மற்றும் நியூசிலாந்தின் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர், 1953 மே, 29ம் தேதி ஏறி வரலாற்று சாதனை படைத்தனர். இதன் நினைவாக, எவரெஸ்ட் சிகரம் ஏறிய நபர்களை பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் மே 29ல் சர்வதேச எவரெஸ்ட் தினம் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில், எவரெஸ்ட் சிகரத்தில், 30 முறை ஏறி சாதனை படைத்த நேபாளத்தைச் சேர்ந்த காமி ரீட்டா, 14 மணி நேரம் 31 நிமிடங்களில் எவரெஸ்ட் சிகரத்தின் மீது அதிவேகமாக ஏறிய முதல் பெண் என்ற சாதனை படைத்த நேபாளத்தின் பூஞ்சோ லாமா ஆகியோருக்கு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.இதேபோல, கடந்த 20ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்த நம் நாட்டைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயனை, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா நேற்று பாராட்டினார். கடற்படை அதிகாரியின் மகளான காம்யா, மும்பையில் உள்ள கடற்படை பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். மிக இளம்வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்திய பெண் மற்றும் உலகளவில் இளம்வயதில் சிகரம் தொட்ட இரண்டா-வது பெண் என்ற பெருமையை காம்யா பெற்றுள்ளார். இதுதவிர, உலகின் ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைக்கும் முயற்சியில், இதுவரை ஆறு சிகரங்களின் மீது ஏறி காம்யா சாதனை படைத்துள்ளார். வரும் டிசம்பரில், அண்டார்டிகா கண்டத்தில் உள்ள வின்சன் மாசிப் சிகரத்தில் ஏறி, தன் சாதனை பயணத்தை அவர் நிறைவு செய்ய உள்ளார்.
03-Oct-2025 | 1
02-Oct-2025 | 1
25-Sep-2025 | 1