உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  ரூ.250 கூலிக்கு ஆள் பிடித்து போராட்டம் கல் குவாரி உரிமையாளர்கள் நிலை பரிதாபம்

 ரூ.250 கூலிக்கு ஆள் பிடித்து போராட்டம் கல் குவாரி உரிமையாளர்கள் நிலை பரிதாபம்

பெரம்பலுார்: கல் குவாரி உரிமையாளர்கள், மறியல் போராட்டத்திற்கு, 250 ரூபாய் கூலிக்கு ஆள் பிடித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரம்பலுார் மாவட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கல் குவாரி, கிரஷர்களில் பணிபுரிந்த, இயந்திர ஆப்பரேட்டர்கள், லாரி டிரைவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாழ்வாதாரத்திற்கு அரசு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டம் அறிவித்தனர். பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், பெரம்பலுார் - அரியலுார் சாலையில், நேற்று காலை, மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலுார் மாவட்ட புவியியல், சுரங்கத்துறை உதவி இயக்குநர் இளங்கோவன், டி.எஸ்.பி., மயில்சாமி, பெரம்பலுார் தாசில்தார் பழனிசெல்வன் ஆகியோர் பேச்சு நடத்தி, மறியலை கைவிட செய்தனர். மறியலில், 50 பெண்கள் உட்பட, 150 பேர் பங்கேற்றனர். அரசியல் கட்சிகளை போல, போராட்டத்தில் அதிக ஆட்களை காட்ட வேண்டும் என்பதற்காக, கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், தொழிலுக்கு சம்பந்தமில்லாத கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலரை, 250 ரூபாய் கூலி தருவதாக கூறி, லோடு ஆட்டோவில் அழைத்து வந்தனர். மறியல் முடிந்த பின், அவர்களுக்கு, 200 ரூபாய் மட்டுமே தந்ததால், பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப் போது, கலெக்டர் அலுவலகம் வரை மனு கொடுக்க வந்தால் மட்டும், 250 ரூபாய் எனக்கூறி, அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். கிடைத்தவரை லாபம் என அவர்களும், 200 ரூபாயை பெற்றுக் கொண்டு நடையை கட்டினர். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, போராட்டத்தை துாண்டி விடுபவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி