உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கணவன் இறந்தது தெரியாமல் சடலத்துடன் கழித்த மனைவி: எலி செத்ததாக நினைத்த பரிதாபம்

கணவன் இறந்தது தெரியாமல் சடலத்துடன் கழித்த மனைவி: எலி செத்ததாக நினைத்த பரிதாபம்

கோவை: கணவன் இறந்து கிடந்தது தெரியாமல், ஒரே வீட்டில் ஐந்து நாட்களாக மனைவி வசித்து வந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை, தெற்கு உக்கடம் கோட்டைபுதூர் காந்திநகரை சேர்ந்தவர் அப்துல்ஷா, 48. இவரது மனைவி சமீம் நிஷா, 42. அப்துல்ஷா வேலைக்கு செல்லாமல், மது அருந்தி வந்தார். மனைவி சமீம்ஷா உடல்நிலை சரியில்லாதவர். தம்பதியின் மகன், ஷாருக்கான் மற்றும் மகள் ஆகியோர், அருகில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், அப்துல்ஷா வீட்டின் அருகில் குடியிருப்போர், ஷாருக்கானுக்கு போன் செய்து, அவரது தந்தை வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தனர்.ஷாருக்கான் அங்கு சென்று பார்த்த போது, வீட்டு படுக்கை அறையில் அப்துல்ஷா படுத்திருந்தார். அங்கிருந்த தாயிடம், துர்நாற்றம் குறித்து ஷாருக்கான் கேட்டார். அதற்கு அவர், 'எலி எங்காவது செத்து கிடக்கும். அதில் இருந்துதான் துர்நாற்றம் வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.தந்தை அப்துல்ஷா தூங்குவதாக நினைத்து, ஷாருக்கானும் சென்று விட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் அப்துல்ஷா வீட்டில் இருந்து, கடும் துர்நாற்றம் வீசுவதாக, ஷாருக்கானுக்கு மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கு சென்ற ஷாருக்கான், படுக்கையறையில் இருந்து தந்தை அப்துல்ஷா எழுந்து வராததும், அங்கிருந்து தான் துர்நாற்றம் வீசுவதையும் உணர்ந்தார்.அவர் இறந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஆனதால், கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. அவர் இறந்தது தெரியாமல், அவரது மனைவி வீட்டிலேயே, 5 நாட்களுக்கு மேலாக வசித்து வந்துள்ளார். கடைவீதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rathna
ஜூலை 09, 2025 11:03

படிப்பறிவு இல்லாத பெண்கள் உலக அறிவு இல்லாததும் காரணம்


Padmasridharan
ஜூலை 07, 2025 10:43

5 நாளா, பொண்டாட்டி, புருஷனுக்கு சாப்பாடு தண்ணி கொடுக்காம எழுப்ப கூடவா இல்ல சாமி..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை