ரெ.ஆத்மநாதன், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம், மனதை பதைபதைக்க வைத்த ஒரு துயரச் சம்பவம் என்பதில், மாற்றுக் கருத்தே இல்லை!'வருமுன் காப்பதே வையத்திற்குத் தேவை' என்ற உயர்ந்த கருத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நம் தொல் தமிழ்நாட்டில், அதைப் பின்பற்றாமல் கோட்டை விடுவது, வருத்தத்திற்குரிய வாடிக்கை நிகழ்ச்சியாகப் போய்விட்டது.இனி, என்ன முடிவுகள் எடுத்து எவ்வளவு கடினமாகச் செயல்பட்டாலும், அரை நுாறு உயிர்கள் திரும்பி வரப் போவதில்லை; பெற்றோரை இழந்து அனாதைகளாக அழுது புலம்பும் அபலைக் குழந்தைகளைத் திருப்திப்படுத்தவும் முடியாது.இந்த நிலையில், 'பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்' என்ற அறிவிப்பைக் கூட ஏற்கலாம். ஆனால், கள்ளச்சாராயம் குடித்து இறந்த குடும்பங்களுக்கு, அரசு அறிவித்த 10 லட்சம் ரூபாய் நிவாரணம் என்பது, எந்த விதத்திலும் நியாயமானதாகத் தோன்றவில்லை!'கள்ளச்சாராயம் அருந்தக் கூடாது' என்ற சட்டத்தை மீறியவர்களல்லவா அவர்கள்! சட்டத்தை மீறுபவர்கள் தண்டனைக்கு உரியவர்களே தவிர,அரசின் நிவாரணம் பெறும் தகுதி உடையவர்களல்லர்!இது போன்ற அறிவிப்புகள், தவறான முன்னுதாரணங்களாக ஆகி விடாதா? எவ்வளவு காலத்திற்குத்தான் இது போன்ற அபத்தங்களைப் பொறுத்துக் கொள்வது? சுதந்திரம் அடைந்து, பவள விழா கொண்டாடி என்ன பயன்?சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டாமா? இப்பொழுது நிவாரணத் தொகையே, 5 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கும் நிலையில், இதை, தவறு செய்த அதிகாரிகளிடமிருந்தும், கள்ளச்சாராயம் தொடர்பாக கைதாகி இருக்கும் குற்றவாளிகளிடமிருந்தும் வசூலிக்க வேண்டும்! அப்பொழுதுதான் இது ஒரு படிப்பினையாகி, தவறு செய்ய நினைப்போருக்கும் கடிவாளமாக அமையும்!பொது நிதியை, பொதுமக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சட்டத்தை மீறுவோருக்கு, அது எள்ளளவும் செல்லக் கூடாது! சீர் செய்யப்பட வேண்டியது போக்குவரத்து துறை!
ஜி.
ராமநாதன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போக்கு
வரத்துக் கழகத்தில், அரசியல் தலையீட்டால், ஊழல், இலவச பயணங்கள், திட்டமிடா
நேர விரயங்கள், குறைவான பயணியருடன் செல்லும் பஸ்களின் டீசல் விரயம் என
எக்கச்சக்க பிரச்னைகள் நிலவுகின்றன.இது ஒரு புறம் இருக்க, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமை, உடல் உபாதை, மன உளைச்சல் என, அவர்களின் பிரச்னைகளும் ஏராளம்.தனியார்
பஸ்களை தயாரிக்கும் மற்றும் இயக்கும் நேர்மையான அதிபர்களிடம் பேசி,
இத்துறையை லாபகரமாக இயக்க அரசு ஆவன செய்ய வேண்டும் அல்லது துறையை
முற்றிலும் தனியார் மயமாக்கி விட வேண்டும். ' இண்டியா' கூட்டணி கேரளாவுக்கு பொருந்தாது!
வி.எச்.கே.
ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கேரளாவில், லோக்சபா தேர்தலில் காங்., 18 தொகுதியில், மார்க்., கம்யூ.,
மற்றும் பா.ஜ., தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன மாநிலத்தை ஆளும் இடதுசாரி
கூட்டணி ஒரே ஒரு இடத்தில் ஜெயித்தது அவமானமே.முடிவு வெளியாகி
ஐந்து நாட்களாக தீவிரமாக அலசி ஆராய்ந்த பின், 'முஸ்லிம் தீவிரவாத
அமைப்புகளின் ஆதரவே, காங்., வெற்றிக்குக் காரணம்' என, மார்க்., கம்யூ.,
மாநில செயலர் கோவிந்தன் கூறினார்.இக்கட்சியின் தீவிர ஆதரவாளர்களான பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஈழவர்களின் ஓட்டு, அப்படியே பா.ஜ.,வுக்கு கிடைத்து விட்டது.காங்கிரஸ்,
ஜமாத் இ -இஸ்லாமி, எஸ்.டி.பி.ஐ., ஐ.யு.எம்.எல்., கூட்டணி, கேரளாவின்
மதச்சார்பற்ற முற்போக்கு தோற்றத்துக்கு, சிக்கலை உண்டாக்கி விட்டது. கிறிஸ்தவர்களின்
ஒரு பிரிவு, திரிச்சூரில், பா.ஜ.,வை ஆதரித்து விட்டது. அன்னிய நிதி பற்றி,
மத்திய விசாரணைக் குழுக்கள் சில, பிஷப்களை விசாரித்தன. பா.ஜ.,
நிகழ்ச்சிகளில், பிஷப்கள் கலந்து கொண்டனர். ஆனால், ஜாதி அடையாள மெஜாரிட்டி
அரசியலை, மார்க்., கம்யூ., தொடர்ந்து எதிர்க்கும் என்கிறார் கோவிந்தன்.நாட்டில், ஒட்டுமொத்தமாக கம்யூ., அடையாளம் அழிந்து, கேரளாவில் மட்டும் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.விவசாயிகள்
மற்றும் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு, மாநில கட்சிகளின் தயவில்
தேர்தல்களை சந்திக்க துவங்கியது முதல், கட்சி வளர்ச்சியில் தேக்கம்
ஏற்பட்டது. அடுத்து வரக் கூடிய சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப்
பிடிக்க, காங்கிரஸ் பலமான அஸ்திவாரம் போடுகிறது. அதற்கு முன்னோட்டம் தான்,
வயநாடு லோக்சபா தொகுதியில் பிரியங்காவை நிறுத்தும் திட்டம்.ஆக மொத்தம், 'இண்டியா' கூட்டணி, கேரளாவுக்கு பொருந்தாது. குடும்பத்துடன் செலவிட நேரம் கொடுங்கள்!
ந.தேவதாஸ்,
சென்னையில் இருந்து எழுதுகிறார்: 'போலீசாருக்கு சிகிச்சை அளிக்கவும்,
கவுன்சிலிங் தரவும், முதல் கட்டமாக, 'மகிழ்ச்சி' என்ற திட்டத்திற்-கான
ஆலோசனை மையம், சென்னையிலும், மதுரையிலும் துவக்கப்பட்டுள்ளது; கோவையிலும்
திறக்கப்படும்' என, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். நாட்டில்
மற்ற எல்லா துறையினருக்கும், நாள் ஒன்றுக்கு இவ்வளவு நேரம் தான் வேலை
என்-றிருக்கும் போது, போலீசாருக்கும், ராணுவத்-தினருக்கும் மட்டும்,
அப்படிப்பட்ட ஒரு வரையறை கிடையாது; 24 மணி நேரமும் பணி நேரமே!பணிக்கு
இடையே கிடைக்கும் இடைவேளையில் தான், துாக்கம், குடும்பம், கொண்--டாட்டம்
எல்லாம். அதனால், வேலை மீது இவர்-களில் பலருக்கு வெறுப்பு ஏற்படுகிறது. குடும்பத்துடன் இருந்தாலும், குடும்பத்திற்காக நேரத்தை செலவிட முடியாத அவல நிலை, போலீசாருக்கு உள்ளது. இந்த
நெருக்கடியால், மனதில் தேங்கிக் கிடக்கும் வெறுப்பு, ஆதங்கம், ஆவேசம்
போன்றவை, வாய்ப்பு கிடைக்கும் போது வெடித்து சீறிடுகின்றன. அத்துடன்,
இவ்--வேலையில் அதிகாரமும் சேர்ந்திருப்பதால், பொது மக்கள் மீதான
அத்துமீறலாகவும் வெடிக்--கிறது. ஓய்வில்லாத இந்த பணிச்சுமை, சிலரை தற்கொலை முடிவுக்கும் அழைத்துச் சென்று விடுகிறது. அவர்களுக்கு
வார விடுமுறை அளிப்பதுடன், பண்டிகை விசேஷ நாட்களில், குடும்பத்தாருடன்
செலவிடவும், சுழற்சி முறையில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் வேண்டும்.அத்துடன்,
வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே, இரவு பணி வழங்க வேண்டும். இதையெல்லாம்
நடைமுறைப்படுத்தாமல், அவர்களுக்கு, 'மகிழ்ச்சி' போன்ற ஆலோசனை மையம்
நடத்தினாலும் எந்த பலனும் இருக்காது.