உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / அடுத்த வேலையை பாருங்கள் ராகுல்!

அடுத்த வேலையை பாருங்கள் ராகுல்!

எஸ்.மணிமுருகன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மனிதன் நடந்து சென்று கொண்டிருக்கும் போதே, தடுக்கி விழுந்து உயிரிழப்பதும், வாகனங்களிலும், ரயில்களிலும், விமானங்களிலும்,கப்பல்களிலும் பயணிக்கும் போது விபத்துகள் நேரிட்டு உயிரிழப்பதும், உலகில் எந்த நாட்டிலும் சாதாரணமாக நடக்கக்கூடியவை தான். சமீபத்தில், சென்னை, கவரைப்பேட்டை அருகே, நின்றிருந்த சரக்கு ரயில் மீது கர்நாடகாமாநிலம் மைசூரிலிருந்து, பீஹார் மாநிலம் தர்பங்காவுக்கு, 1,800 பயணியருடன் புறப்பட்ட பாக்மதி விரைவு ரயில் மோதியதால் விபத்து நேர்ந்துள்ளது.இறைவன் அருளால், இந்த விபத்தில், உயிர்சேதம் எதுவும் நேரவில்லைஎன்றாலும், 19 பேர் வரை பாதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள,காங்., தலைவர் ராகுல், என்னமோ பா.ஜ., அமித் ஷா தான், சரக்கு ரயிலை லுாப் லைனில்நிப்பாட்டி வைத்திருந்தது போலவும், பிரதமர்நரேந்திர மோடி அந்த பாக்மதி விரைவு ரயிலை ஓட்டி வந்தவர் போலவும், 'இவ்விபத்து,ஒடிசாவின் பாலாசோர் கோர விபத்தை நினைவூட்டுகிறது. 'இது போன்ற விபத்துகளில் பல உயிர்கள்பறிபோன நிலையிலும், அரசு பாடம் கற்கவில்லை. பொறுப்பு ஏற்பது உயர் மட்டத்தில்இருந்து துவங்க வேண்டும். இந்த அரசு விழித்து கொள்வதற்கு முன் இன்னும் எத்தனை குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழக்க நேருமோ?' என்று கூறி இருக்கிறார். நம் நாட்டில், எத்தனையோ ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு, லட்சக்கணக்கானவர்கள்தங்கள் உயிர்களையும், உடலுறுப்புக்களையும் இழந்து இருக்கின்றனர்.அவற்றில் பெரும்பாலானவை, காங்கிரஸ், மத்தியில் ஆட்சிக் கட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்த போது நிகழ்ந்தவை.தமிழகத்தில், அரியலுாரில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு மாத்திரம், அப்போது ரயில்வே துறை அமைச்சராக இருந்த லால் பகதுார் சாஸ்திரி தன் பதவியை விட்டு விலகினார்.அப்போதும் கூட, ஓ.வி.அழகேசன் என்ற அமைச்சர், பதவி விலகவில்லை.இதை கிண்டலடித்த நம் முதுபெரும் தி.மு.க.,காரர், 'அழகேசா! ஆண்டது போதாதா?மக்கள் மாண்டது போதாதா?' என பொதுக்கூட்டங்களில் விமர்சித்தும், வீதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டியும் கேலி செய்தது, வரலாறு.இந்த காலகட்டங்களில் மத்தியில், ராகுலின் கொள்ளுத்தாத்தா நேருவும், பாட்டி இந்திராவும்,அப்பா ராஜிவும் தான் பிரதமர்களாக இருந்தனர்.காங்கிரஸ் கட்சியும், அந்த மூன்று தலைமுறையும் நடந்த விபத்துகளில் இருந்து எந்த பாடமும் கற்றதாக தெரியவில்லை.ஆனால், ராகுல், 'இந்த அரசு விழித்து கொள்வதற்கு முன் இன்னும் எத்தனை குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழக்க வேண்டுமோ...' என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.அடுத்த வேலையைப் பாருங்கள் ராகுல்! நீலகிரியை முதல்வர் கவனிக்கணும்!சு.மனோகரன், ஒருங்கிணைப்பாளர், நீலகிரி மாவட்ட உள்ளாட்சிகள் மீட்பு மக்கள் இயக்கம், நீலகிரியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நீலகிரி மாவட்டத்தில்,உதகமண்டலத்தை மாநகராட்சியாக நிலை உயர்த்துவதற்கு, உதகமண்டலம் நகராட்சியில் அவசரமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,அதனுடன் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் வாழும் மக்களுக்கு, பேரதிர்ச்சியாக இருந்தது.தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன; கிராமசபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிகார பரவல் தேவை என்ற கொள்கை கொண்ட தமிழக அரசு, சிறிய மலைக்கிராமங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரங்களை பறித்து, அவற்றை, மாநகராட்சி போன்ற அமைப்புகளிடம் கொடுக்க திட்டமிடுவது முரணாக உள்ளது.நீலகிரி, தமிழகத்தில்உள்ள மிகச்சிறிய மாவட்டம்; பழங்குடிகள் அதிகம் வாழும் மாவட்டம்.சுற்றுச்சூழல் முக்கியத்துவம்வாய்ந்த நம் நாட்டின், முதல் பல்லுயிர் சூழல் மண்டலம். சிறு - குறு தேயிலை விவசாயிகள், காய்கறி விவசாயிகள் மற்றும்பெரும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிறைந்தது.இங்கு சிறிய தேயிலை தொழிற்சாலைகள் தவிர, வேறு சிறு குறு தொழில்கள்எதுவும் இல்லை; 98 சதவீதமக்கள் வறுமை நிலையில்உள்ளனர்.இங்குள்ள, 11 பேரூராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தகுதியே இல்லாதவை; உள்ளாட்சித்துறை அலுவலர்கள், தங்கள் பணியை தக்க வைத்துக்கொள்ள, தவறான தகவல்களை கொடுத்து, அவற்றை பேரூராட்சிகளாக வைத்துள்ளனர்.அனைத்து பேரூராட்சிகளிலும், ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. கிராம ஊராட்சிகளுக்கு மத்திய அரசு வாயிலாக கிடைக்கும் 'ஜல் ஜீவன், ஜல் சக்தி, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' உள்ளிட்ட எந்த பயனும், இப்பகுதி மக்களுக்கு கிடைப்பதில்லை.மேலும், ஆதிவாசி மக்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த திட்டங்களும், மானியங்களும் கிடையாது; ஜனநாயகத்தில் பங்கு பெறும் வாய்ப்பும், ஆதிவாசிமக்களுக்கு கிடைப்பதில்லை.பெரும் தேயிலை எஸ்டேட்களிலிருந்து கிடைக்கும் வரி வருவாயை கணக்கில் எடுத்துக் கொண்டு, பேரூராட்சிகளாகநிலை உயர்த்தப்பட்டதால்,வீட்டு வரி, சொத்துவரி உட்பட அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டது தான் மிச்சம்; தொழிலாளிகளால், அதைக் கட்டவே முடியவில்லை.எனவே, நீலகிரி மாவட்டத்தின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். இதற்கு சிறப்பு குழு அமைக்க வேண்டும்.இது குறித்து தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி, மலை மாவட்ட மக்களின் நலனுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.தேவையற்ற அரசு விழாக்கள்!அ.யாழினி பர்வதம், சென்னையில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், சென்னைமெரினா கடற்கரையில் இருந்த நீச்சல் குளம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இந்த நீச்சல் குளம் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தது தானே. இங்கு புதுப்பிக்கும் பணிகள் நடந்த பின், மீண்டும் திறக்கப்பட்டுஉள்ளதாக அரசு செய்திக்குறிப்பு வெளியானால் போதுமே. இதற்கு ஒரு ஆடம்பர விழா எதற்கு? துணை முதல்வர்உதயநிதி திறந்து வைக்கிறார்.கூடவே அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., சென்னை மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் மேலும், அரசுஉயர் அதிகாரிகள் புடைசூழ அங்கு சென்றதேன்?இவர்கள் அரசு அலுவல்நேரத்தில், மக்களுக்கானபணிகளை கவனிக்க வேண்டாமா? நிதி பற்றாக்குறையால்ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவே திண்டாடிய சூழலில், இதுபோன்ற அரசு விழாக்கள் அவசியம்தானா? விளம்பரங்களோ, ஆடம்பரங்களோ வெற்றி தராது. ஆக்கபூர்வமானமுன்னேற்றங்களே மக்களின் கவனத்தை பெறும். எனவே, தேவைஇல்லாமல் அரசு விழாக்கள் நடத்துவதையும், அமைச்சர்களும், அதிகாரிகளும் அங்கு கூடுவதையும்நிறுத்திக் கொள்ளலாம். இதுவே மக்கள் நலனுக்கும்,நாட்டு வளத்திற்கும் உகந்ததாகும் என்பதை இனியாவது உணர்வரா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sivasankaran Kannan
அக் 15, 2024 16:40

ராகுல் போன்றவர்களுக்கு பதில் சொல்லி, கடிதம் எழுதி நாம் நமது பொன்னான நேரத்தை வீணாக்க கூடாது.. இந்த சற்றும் தகுதி இல்லாத, பதவிக்கு பரிதவிக்கும் பிறவி என்ன வேண்டுமானாலும் உளறும்.. போங்கிரெஸ் இல்லா இந்தியா கனவை நனவாக்க அவதாரம் எடுத்த பிறவி..


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 15, 2024 15:58

ராவுளுக்கு அதானி அம்பானி மோடியை விட்டால் உலகத்தில் வேறுயாரை தெரியும் ? அவர் தெரிஞ்சிட்டு தான் என்ன செய்வாரு. பச்சபுள்ளையை போயிட்டு பால்புட்டி கிடையாது என சொல்வது உலகத்துக்கே ஒவ்வாது என அவர் நினைக்கிறார். இந்தஆளு பச்சை குழந்தை இல்ல , இந்தியாவிற்கு பிடித்த கேடு , கண்டிப்பாக கொசு டெங்கு மலேரியாவை போல மனிதகுல நடமாட்டத்துக்கு வெகுதூர எட்டி இருக்கவேண்டியவர் . இந்தியாவிற்கு லாயக்கற்றவர் . பாக்கிஸ்தான் பங்களா இல்லாங்காட்டி சீனா இத்தாலி அமெரிக்கா என சர்வதேச எல்லையில் வாழவேண்டிய ஆளு பப்பு. நம்மாலான முடிந்ததை கருப்பு பலூனு காட்டி நம்மட எதிர்பதிவை இடுவோம் அண்ணாச்சியாரே


VENKATASUBRAMANIAN
அக் 15, 2024 08:19

ராகுல் போல் முதிர்ச்சி இல்லாத தலைவரை பார்க்க முடியாது. என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே உளறுகிறார்.


Barakat Ali
அக் 15, 2024 10:47

அவர் காங்கிரசால் முன்னிறுத்தப்படும் வரை பாஜகவுக்கு கவலை இல்லை ... உண்மையில் பாஜவுக்காக கடுமையாக உயிரைக் கொடுத்து உழைக்கிறார் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 15, 2024 11:50

இவர் அப்பாவியோ ஏமாளியோ அல்ல... ஐ க்யூ குறைவு... அவ்வளவுதான்... இருக்கும் ஐ க்யூ வையும் தேச விரோத செயல்களுக்காக பயன்படுத்துகிறார்... இவரது முந்தைய தலைமுறைகள் கொள்ளை அடித்ததை நல்ல மியூச்சுவல் பண்டுகளில் சேர்த்து வைத்துள்ளார்... திறமைமிக்க ஆலோசகர்கள் இவருடைய முதலீட்டையே மாடலாக வைத்துக்கொண்டு பணம் போடுங்கள் என்று பரிந்துரை செய்கிறார்கள் ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை