உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / நிஜமான சமூக நீதி இதுதான்!

நிஜமான சமூக நீதி இதுதான்!

நிஜமான சமூக நீதி இதுதான்!

அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: நெல்லை மாநகராட்சி தி.மு.க., மேயராக இருந்த சரவணன் மீது, அக்கட்சி கவுன்சிலர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், அந்த மாவட்ட தி.மு.க., பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பலமுறை பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை; இதனால், தன் மேயர் பதவியை ராஜினாமா செய்தார் சரவணன். தொடர்ந்து, புதிய மேயர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, அடுத்த மேயரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் தி.மு.க., தலைமை களம் இறங்கியது. 'மக்களோடு மக்களாக பழகி, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, அவர்களோடு நின்று போராடி தீர்வு காண்பவர்கள் தான் மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும்' என்று அண்ணாதுரை சொல்லியிருக்கிறார்.அதுபோல, பல ஆண்டுகளாக நெல்லை மாநகர தி.மு.க.,வின் மூத்த முன்னோடியாகவும், சைக்கிளிலேயே நகர் முழுதும் சுற்றி சுழன்று பணியாற்றும் 58 வயதான, வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணனை, தி.மு.க., தலைமை தேர்ந்தெடுத்து, மேயராக ஆக்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். சாதாரண சாமானியர்களும், பெரிய பொறுப்புகளுக்கு வர முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள இச்சம்பவம், மற்ற கட்சிகளுக்கும் பாடமாக அமைய வேண்டும்.பணம் படைத்தவர்கள், மிட்டா மிராசுகள், அரசியல் வாரிசுகளுக்கு தான் கட்சி பொறுப்பு, ஆட்சி அதிகாரத்தில்வாய்ப்பு என்பதை மாற்றி, எதிர்பார்ப்புகள் இன்றி, எளிமையாக இதுபோன்று இயக்கங்களில் பணியாற்றும் அடிமட்ட தொண்டர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கும் போது தான், உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்படும் என்பது உறுதி.

வங்கதேசத்தில் அமைதி திரும்பட்டும்!

வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்தில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:நம் அண்டை நாடான வங்க தேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக, முஜிபுர் ரஹ்மானின் மகளான ஷேக் ஹசீனா, அந்நாட்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து, வங்கதேசத்தின் முன்னணி வார இதழான, 'பிளிட்ஸ்' ஆசிரியர் சலா உதின் சோகிப் சவுத்ரி எழுதிய தலையங்க கட்டுரையில், 'வங்கதேச மாணவர்கள் போராட்டத்தை, 157 பேர் ஒருங்கிணைந்து நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அல் - குவைதா பயங்கர வாத அமைப்புடன்தொடர்புடைய பி.என்.பி., கட்சிக்கு முக்கிய தொடர்பு உள்ளது. பி.என்.பி., கட்சியின் மூத்த தலைவர்டேவிட் பெர்க்மான் போராட்டத்தை துாண்டினார்.'பிரிட்டனுக்கு தப்பியோடிய பி.என்.பி., கட்சியின் தலைவர் தாரிக் ரகுமான், அங்கிருந்தபடியே போராட்டத்தை வழிநடத்தினார்; இவர் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன். மாணவர் போராட்டத்தின்பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.,உளவு அமைப்பும், அமெரிக்காவின் சி.ஐ.ஏ., உளவு அமைப்பும் இருக்கின்றன' என,குறிப்பிட்டுள்ளார்.வங்கதேசத்தில் கலவரத்தை துாண்டுவது தொடர்பாக, லண்டனில் ஐ.எஸ்.ஐ., உளவு அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்னர் ரகசிய கூட்டத்தை நடத்தினர்.அப்போது, 'கலவரத்தில் பலரை கொலை செய்தால், பல கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்' என்று ஐ.எஸ்.ஐ., சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.இதன் காரணமாகவே வங்கதேச போராட்டத்தில்கணிசமான உயிரிழப்புஏற்பட்டதாக கூறப்படுகிறது.ஷேக் ஹசீனா சமீபத்தில் கூறும் போது, 'வங்கதேசம், மியான்மரின் சில பகுதிகளை ஒன்றிணைத்து புதிய கிறிஸ்துவ நாட்டை அமைக்க அமெரிக்கா விரும்புகிறது. வங்கக் கடலில் புதிய கடற்படைத் தளம் அமைக்கவும் அந்த நாடு முயற்சி செய்கிறது; இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாகவே எனக்கு எதிராக சதி நடக்கிறது' என்று குற்றம் சாட்டினார்.ஷேக் ஹசீனாவின் மகன் ஷாஜிப் வாஸத் ஜாய் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் நிருபர்களிடம், 'என் தாய் வங்க தேச மக்கள், நாட்டின் வளர்ச்சிக்காக மிகக் கடினமாக உழைத்தார். அவரதுஉயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், குடும்பத்தினரின் அறிவுரைப்படி வங்கதேசத்தை விட்டு அவர் வெளியேறிஉள்ளார்; அவர் மீண்டும் அரசியலுக்கு திரும்ப மாட்டார்' என்றார்.காரணம் எதுவாக இருந்தாலும், அண்டை நாட்டின் அமைதி, நம் இந்திய தேசத்திற்கு முக்கியமான ஒன்று. வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்ப கடவுளை பிரார்த்தனை செய்வோம்.

முதல்வர் எண்ணி பார்ப்பாரா?

என்.மல்லிகை மன்னன்,மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாரித்து சமர்ப்பித்திருக்கும் பட்ஜெட்டில், மோடி அரசுக்கு ஆதரவு அளித்திருக்கும் நிதீஷ் குமாரையும், சந்திரபாபு நாயுடுவையும் திருப்திபடுத்த தாராளமாக நிதியை வாரி வழங்கி இருக்கிறார்' என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பீஹார், ஆந்திர மாநிலத்திற்கு அளித்திருக்கும் சலுகைகள், நிதி ஒதுக்கீடுகள் போல தமிழகம், கேரளாவுக்கு எதையும் செய்யாமல் புறக்கணித்து விட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது தான் இவர்களது குற்றச்சாட்டு.'லோக்சபா தேர்தலில்தமிழகத்தில் பா.ஜ., போட்டியிட்ட தொகுதிகளில் படுதோல்வி அடைந்ததற்கு பழிவாங்க இப்படி செய்திருக்கிறார்' என, வழக்கம் போல தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதில் ஆச்சரியம் இல்லை.ஆனால், தமிழக அரசியல்வாதிகள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்... பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏராளமான நிதியை இந்தபட்ஜெட்டில் வாரி வழங்கவில்லை.பா.ஜ., ஆட்சி அமைக்க நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் ஆதரவுக்கரம் நீட்டியதால், இந்த பட்ஜெட்டில் பீஹார் மற்றும் ஆந்திரமாநிலங்கள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளன என்ற வாதம் ஓரளவுக்கு உண்மையே. அந்தக் காலத்தில் பா.ஜ., அரசுக்கு ஆதரவுஅளித்ததால், தி.மு.க.,வுக்கு நன்றி செலுத்த முரசொலி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து சிறப்பித்தார் பிரதமர் வாஜ்பாய். இதை, இப்போது பா.ஜ., அரசை வசைபாடும் முதல்வர் ஸ்டாலின்எண்ணிப் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RAMESH
ஆக 10, 2024 04:30

ஓட்டு அரசியல் செய்யும் திமுக....


Anantharaman Srinivasan
ஆக 09, 2024 23:33

During critical circumstances காலத்தில் பா.ஜ., அரசுக்கு திமுக ஆதரவுஅளித்ததால், தி.மு.க.,வுக்கு நன்றி செலுத்த முரசொலி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து, பின் நாளில் உடல் நலிவுற்று படுத்த படிக்கையான பின் இலாக்காயிவ்லாத மந்திரியாய் வைத்திருந்து மருத்துவ செலவாக பவகோடி ரூபாயை அரசு செலவில் செய்தார் பிரதமர் வாஜ்பாய்....


D.Ambujavalli
ஆக 09, 2024 17:13

இவரை எத்தனை நாள் மேயராக இருக்க விடுவார்களோ ? ‘வாங்கிய கைகள் ‘ அரிப்பெடுக்குமே


A.Gomathinayagam
ஆக 09, 2024 14:01

நெல்லை புதிய மேயர், பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். மக்கள் பிரச்சனை அல்ல அவர் கட்சிக்காரர்கள் உருவாக்கும் பிரச்சனைகளை .


Barakat Ali
ஆக 09, 2024 10:01

பா.ஜ., அரசுக்கு ஆதரவு அளித்ததால், தி.மு.க.,வுக்கு நன்றி செலுத்த முரசொலி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து சிறப்பித்தார் பிரதமர் வாஜ்பாய். இதை, இப்போது பா.ஜ., அரசை வசைபாடும் முதல்வர் ஸ்டாலின்எண்ணிப் பார்க்க வேண்டும்.


VENKATASUBRAMANIAN
ஆக 09, 2024 08:37

தனக்கு வந்தால் ரத்தம் மற்றவருக்கு தக்காளி சட்னி. இதுதான் திராவிட மாடல்


M.S.Jayagopal
ஆக 09, 2024 08:35

நெல்லையின் புதிய மேயர் கிட்டு என்னும் ராமகிருஷ்ணன் பாடு திண்டாட்டம்தான். தீய சக்திகளாகிய தம் கட்சியினரை இவர் சமாளித்து பதவியில் எவ்வளவுநாள் தொடருவார் என்பதை பார்க்க வேண்டும்.


R VASANTHA Kumar
ஆக 09, 2024 08:20

என்னே ஒரு சமூக நீதி? அக்கட்சியின் செயல்களுக்கு இவர்கள் போல் உள்ளவர்கள் எதிர்த்து பேச மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இத்தனை வருடமும் இவர் ஏன் அங்கீகரிக்கபடவில்லை. இவரை போல் கட்சியில் உள்ளவர்கள் மற்ற எண்ணற்றவர்கள் எங்கே உள்ளனர்?


Bullet
ஆக 09, 2024 07:28

கிட்டு என்ற சாதாரண வார்டு கவுன்சிலர் ஐ மேயராக்கியது சமூக நீதியா? தனது கட்டளைகளுக்கு செவிசாய்க்க ஒரு ரப்பர் ஸ்டாம்ப் வேண்டும் என ஆக்கப்பட்டிருக்கிருக்கிறார். உண்மையான சமூக நீதி என்றால் முதல் முறையே சரவணனை மேயர் ஆக்குவதற்கு பதில் இவருக்கு பதவி கொடுத்திருந்தால் பாராட்டலாம்


முக்கிய வீடியோ