உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஒண்ணும் நடக்க மாட்டேங்குதே!

ஒண்ணும் நடக்க மாட்டேங்குதே!

மதுரை மாவட்டம், கள்ளந்திரியில், புதிய கட்டடங்களை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். அப்போது பேசுகையில், 'அமைச்சர் மூர்த்தி தொகுதிக்கு உட்பட்ட, எஸ்.ஆலங்குளத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் வேண்டும் என, அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார். அதே போல, ஐ.டி., அமைச்சர் தியாகராஜனும், தன் தொகுதியான ஆரப்பாளையத்தில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் வேண்டும் என முதல்வரிடம் கேட்டார். இருவரின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற, தலா, 1.20 கோடி ரூபாயில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன' என்றார்.இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அமைச்சர்கள் கோரிக்கை வச்சா, அடுத்த நிமிஷமே செஞ்சு கொடுத்துடுவீங்க... மக்கள் கோரிக்கை வச்சா தான் எதுவும் நடக்காது...' என முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'இவரிடம் மருத்துவர்கள் கோரிக்கை வச்சா கூட ஒண்ணும் நடக்க மாட்டேங்குதே...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 19, 2024 17:00

இனிமேல் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் அமைச்சர்களை பிடியுங்கள், அப்போதுதான் வேலை நடக்கும் என்று சரியாக சொல்லிவிட்டார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை