உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஞானம் இல்லாமல் போச்சே!

ஞானம் இல்லாமல் போச்சே!

சென்னையில் நடந்த பட விழா ஒன்றில் தயாரிப்பாளர் கே.ராஜனிடம், 'ஒரு படத்தின் இசை, இசையமைப்பாளருக்கு சொந்தமா; தயாரிப்பாளருக்கு சொந்தமா?' என, கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர், 'தயாரிப்பாளருக்கு தான் சொந்தம்.கொத்தனாருக்கு கூலி கொடுத்து தான் ஒரு கட்டடம் கட்டப்படுகிறது. கட்டடத்தை கட்டி முடித்த பின், அது தனக்கு தான் சொந்தம் என கொத்தனார் உரிமை கேட்பது போல் தான், இளையராஜா கேட்பது முட்டாள் தனம்.'இளையராஜா கேட்பது போல், பாடுபவர், வாத்திய இசை கலைஞர்கள், பாடல் எழுதுபவர் என எல்லாருமே சொந்தம் கொண்டாடினால் என்னவாகும். இளையராஜாவை அறிமுகப்படுத்தியதே பஞ்சு அருணாச்சலம் தான். அவர் இளையராஜாவுக்கு சொந்தம் கொண்டாடலாமா...?' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'இசையில் ஞானமா இருக்கிற அவருக்கு, மற்றவர்களிடம் பெருந்தன்மையா நடந்துக்குற ஞானம் இல்லாம போச்சே...' என, புலம்பியபடி நடையை கட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 11, 2024 06:54

இந்த 'இசை, எழுத்து போட்டி, முட்டையா கோழியா என்று சிரஞ்சிவி சப்ஜெக்ட்டாக ஆளாளுக்கு மாற்றி வருகிறார்கள்


சமீபத்திய செய்தி