உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அவர் காது ஆப் ஆகிடும்!

அவர் காது ஆப் ஆகிடும்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவை வேட்பாளர் கலாமணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அவ்வழியாக ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட பிரசார வாகனம் ஒன்று வந்தது.அதில் இருந்த ஸ்பீக்கரில் சத்தமாக ஒலி வந்ததால், சீமான் தன் பேச்சை நிறுத்தி, 'நாம இங்கே ஓட்டு கேட்டுக் கொண்டிருந்தால், நமக்கு பின்னாடி இன்னொருத்தன் ஓட்டு கேட்கிறான்...' என்றார். கூட்டத்தினர், 'அது நம்ம கட்சி வண்டி தானுங்கண்ணா... வாகன பிரசாரம்...' என்றனர். இதையடுத்து, அந்த வாகனத்தை திரும்பி பார்த்த சீமான் சமாளித்து, 'நம்ம ஆளுங்க தான் நமக்கு ஆப்பு அடிப்பாங்க...' என்றார்.கட்சி நிர்வாகி ஒருவர், 'அண்ணன் மைக்கை பிடிச்சிட்டாருன்னா, வாய் மட்டும் தான் வேலை செய்யும்... அவர் காது ஆப் ஆகிடும்... அதான் அந்த வண்டி எந்த கட்சிக்கு ஓட்டு கேட்குதுன்னு அவருக்கு தெரியாம போச்சு...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஏப் 17, 2024 06:34

பாவம், வருவது தன் கட்சி வாகனம் என்று கூடத் தெரியாமல் மும்முரமாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்


புதிய வீடியோ