உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / குட்டி போடுதான்னு பார்க்கணும்!

குட்டி போடுதான்னு பார்க்கணும்!

சென்னை, மாநகராட்சி, ராயபுரம் மண்டல குழு கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு தலைமையில் நடந்தது. இதில், 61வது வார்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கவுன்சிலர் பாத்திமா முசாபர் பேசுகையில், 'புதுப்பேட்டையில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. பள்ளி குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பாக வெளியே போக முடியவில்லை. நாய் கடியில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்' என்றார்.இதற்கு பதிலளித்த மண்டல குழு தலைவர், 'கருத்தடை செய்யப்பட்ட நாய்கள் தான் குட்டி போடுது... உண்மையில் நாய்களுக்கு கருத்தடை செய்கின்றனரா என டவுட்டா இருக்கு...' என்றார்.குசும்புக்கார கவுன்சிலர் ஒருவர், 'ரோடு, கால்வாய் வேலைக்கு தரக்கட்டுப்பாட்டு சோதனை நடத்தி தவறை கண்டுபிடிக்கலாம்... நாய் கருத்தடை விஷயத்தில் எப்படி தவறை கண்டுபிடிப்பது...?' என கேட்க, சக கவுன்சிலர், 'மறுபடியும் குட்டி போடுதான்னு தான் பார்க்கணும்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜூலை 23, 2024 23:21

தாய்மார்களுக்கு கருத்தடை பண்ணினாலே குழந்தை பிறக்கிறது. இந்த லட்சணத்தில் நாய்களுக்கு எங்கே ஒழுங்காக செய்திருக்கப்போகிறார்கள். பாதி நாய்களுக்கு செய்து விட்டு மீதி நாய்களுக்கு செய்ததாக கணக்கெழுதியிருப்பார்கள். அரசு விவகாரமென்றாலே ஊழல்தானே.