உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மொக்கையா தான் இருக்கு!

மொக்கையா தான் இருக்கு!

சென்னையில் நடந்த, உழைப்பாளர் தினம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மா.கம்யூ., முன்னாள் மாநில செயலர் ராமகிருஷ்ணன் பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில், 'மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரிடம், எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி பார்முலாவில் நீங்கள் பயணிக்கவில்லை. அப்படி இருந்தும் வெற்றி பெற்றது எப்படி?' என கேட்டேன்.'இதற்கு அவர், நான் சினிமாவுக்கு வந்த போது, இப்ப மாதிரி ஹாலிவுட் படங்களை பார்க்கும் வசதி இல்லை. இப்போது, 10 ஹாலிவுட் படங்களை பார்த்து, அதில் இருந்து ஒரு கதையை தயாரிக்கின்றனர். அதனால், எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரிடமும் போகாமல், தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்தேன். அப்படி இருந்தும் எம்.ஜி.ஆர்., படம் பண்ணலாம் என்று என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார்' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'இப்ப வர்ற படங்களில் சொல்ற அளவுக்கு எந்த கதையும் இல்லையே... எல்லாம் படு மொக்கையா தான் இருக்கு...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் அதை ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Varadarajan Nagarajan
மே 03, 2024 07:06

திரைத்துறை, பாடலாசிரியர், ஊடகங்கள் போன்றவற்றிற்கு சமுக பொறுப்பு இருந்தது அதனால் எதிர்மறையான விஷயங்களையும், குற்ற சிந்தனைகளையும் விதைக்காமல் இருந்தனர் ஆனால் தற்பொழுது பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் குறிக்கோள் இதில் சமூக பொறுப்பு காலாவதியாகிவிட்டது இன்று பல குற்ற செயல்கள் சினிமாவைப்பார்த்து செய்ததாக சொல்லப்படுகின்றது இவர்களும் சமூக சீர்கேட்டிற்கு உடந்தையானவர்கள்


D.Ambujavalli
மே 03, 2024 06:27

மற்ற மொழிகளிலிருந்து திருடுவதைக்கூட ஒழுங்காக செய்யத் தெரியவில்லை போலிருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை