உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / சூப்பரா பாடம் நடத்துறாங்களே!

சூப்பரா பாடம் நடத்துறாங்களே!

பெரம்பலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு, இம்மையத்தில் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் வகுப்பு நடத்தப்படுகிறது.இந்த இலவச பயிற்சி வகுப்பை, பெரம்பலுார் கலெக்டர் கற்பகம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு அவரே பாடம் நடத்தினார்.பயிற்சியில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர், 'சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி தேறாதவர்கள் தான், தற்போது தனியார் பயிற்சி மையங்களை நடத்துறாங்க... இவங்க கலெக்டர் என்பதால், சூப்பரா பாடம் நடத்துறாங்களே...' என, நெகிழ்ச்சியாக கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ