உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவங்க வாங்கியது யார் ஓட்டு?

இவங்க வாங்கியது யார் ஓட்டு?

தமிழக காங்., மூத்த தலைவர் இளங்கோவன், மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 'லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., ஓட்டு வங்கி அதிகரித்துள்ளதே' என, கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், 'தமிழகத்தில் பா.ஜ., ஓட்டு கன்னியாகுமரி உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே உள்ளது. வட மாவட்டங்களில் அக்கட்சிக்கு கிடைத்த ஓட்டு பா.ம.க.,வுடையது. தமிழகத்தில் தாமரை மலராது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது எங்களுக்கு இதுவரை சந்தேகம் இருந்தது. ஆனால், ஓட்டு எண்ணிக்கையின் போது மோடிக்கே பின்னடைவு ஏற்பட்டதால், தற்போது ஓரளவு உண்மை என நம்புகிறோம்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'பா.ஜ., வாங்கியது பா.ம.க., ஓட்டுன்னா, இவங்க வாங்கியது யார் ஓட்டு...' என முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'இவ்வளவு நாளா ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது சந்தேகத்தை கிளப்பிட்டு, இப்ப கொஞ்சம் ஜெயிச்சதுமே அதை நம்புறாங்களாம்...' என, முணுமுணுத்தபடியே நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M Ramachandran
ஜூன் 14, 2024 19:28

திருட்டு முண்டங்கள் ஒட்டு எந்திரத்தின் மேலால் பழி சுமதி கொண்டிருந்து விட்டு சாதகாமான் முடிவு என்றால் வாயை எஙகோ வைத்து விட்டு வருகிறது.


D.Ambujavalli
ஜூன் 14, 2024 06:28

தோற்றாலும், வென்றாலும் evm பழி / பாராட்டு என்று ஏற்றுக்கொண்டு விடுகிறது


புதிய வீடியோ