உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவரையும் பார்க்க முடியாதே!

இவரையும் பார்க்க முடியாதே!

திருவள்ளூர் லோக்சபா தொகுதி காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து, சென்னை, மாதவரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், மாதவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனம் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், 'இந்தியாவிலேயே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், சசிகாந்த் செந்திலை வெற்றி பெற செய்ய வேண்டும். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால், அவர் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. நம் தொகுதியில் இருந்து ஒருவர் அமைச்சராகும் வாய்ப்புக்கு, நீங்கள் ஒட்டுமொத்தமாக ஓட்டளிக்க வேண்டும்' என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர், '2019ல் நடந்த தேர்தலிலும் இப்படி சொல்லிதான் ஓட்டு வாங்கி, ஜெயகுமாரை ஜெயிக்க வச்சீங்க... அதன் பின் அவரை பார்க்கவே முடியவில்லை... நாளைக்கு இவர் ஜெயித்து அமைச்சரானாலும் இவரையும் பார்க்க முடியாதே...' என, முணுமுணுத்தவாறு நடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஏப் 07, 2024 08:17

நந்தனார் பாடுவது போல' டில்லிக்கு சென்றவர்கள் திரும்பி வருவார்களோ ? '


Dharmavaan
ஏப் 07, 2024 05:26

தூதர்கள் கையில் பொறுப்பு கொடுக்க வேண்டுமா என்று மக்கள் சிந்திக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை