| ADDED : டிச 16, 2025 02:56 AM
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பிறந்த நாள் விழாவை, சென்னை சாந்தோம் சர்ச் வளாகத்தில் சமீபத்தில் அக்கட்சியினர் கொண்டாடினர். தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சர்ச் பாதிரியார் அந்தோணிசாமி, கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார். அப்போது, தமிழக காங்., கலைப் பிரிவின் மாநில நிர்வாகி, மயிலை அசோக்குமார், 'பாதர், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, வருங்கால கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக வேண்டும்; அதற்கும் சேர்த்து ஆசி வழங்குங்கள்' என்றார். உடனே பாதிரியாரும், செல்வப்பெருந்தகையின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் வழங்கினார். இதை பார்த்த காங்., நிர்வாகி ஒருவர், 'தி.மு.க., கூட்டணியில் இருந்தால், எதுவும் கிடைக்காது... விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் போனால், வாய்ப்பிருக்கு...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் சத்தமின்றி சிரித்தனர்.