உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / டென்ஷன் ஆக்கிட்டாங்களே!

டென்ஷன் ஆக்கிட்டாங்களே!

தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் பிரியா தலைமையில் நடந்த சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாத கூட்டத்தில், கவுன்சிலர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.அப்போது, 148வது வார்டு அ.ம.மு.க., கவுன்சிலர் கிரிதரன் பேசுகையில், 'கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களின் நிலை என்ன? பல திட்டங்களை நீங்கள் நிறைவேற்றவில்லை' என்றார்.இதற்கு தி.மு.க., மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தொடர்ந்து, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால், மேயர் பிரியா திடீரென ஆவேசமாகி, 'அவையை நீங்கள் நடத்துகிறீர்களா, நான் நடத்துகிறேனா...' என, சத்தமாக கேட்டார். உடனே கவுன்சிலர்கள், 'கப்சிப்' ஆகினர்.மூத்த நிருபர் ஒருவர், 'எப்பவுமே சிரிச்சிட்டு அமைதியா இருக்கிற மேயரம்மாவை இவங்க டென்ஷன் ஆக்கிட்டாங்களே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை