உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / முதல் எதிரி மூர்த்தி தான்!

முதல் எதிரி மூர்த்தி தான்!

சென்னை, திருவொற்றியூரில், அ.தி.மு.க., சார்பில் நடந்த, முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், மாவட்ட செயலர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வைகை செல்வன் பேசுகையில், 'நம் கட்சியில் ஒற்றை தலைமை கோரிக்கையை, மாவட்ட செயலர் மூர்த்தி தான் முதலில் எடுத்து வைத்தார். அவரை தொடர்ந்தே, நாங்களும் ஒற்றை தலைமையை வலியுறுத்தி, பழனிசாமியை பொதுச் செயலராக்க முயற்சி மேற்கொண்டோம்' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'அப்ப, பன்னீர்செல்வத்திற்கு முதல் எதிரி மூர்த்தியா தான் இருக்கணும்...' என, முணுமுணுக்க, மற்றொருவர், 'எதிர்காலத்துல பழனிசாமி, பன்னீர்செல்வம் ஒண்ணு சேர்ந்துட்டா, இவர் நிலைமை கஷ்டம் தான்...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் நமட்டு சிரிப்புடன் நடையை கட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ