உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / வசமா மாட்டிக்கிட்டாங்க!

வசமா மாட்டிக்கிட்டாங்க!

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. இதில், குடிநீர் வாரியம், தெருவிளக்குகள் சம்பந்தமாக கவுன்சிலர்கள் கோரிக்கைகள் வைக்க, 'வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் இதெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளது' என, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளித்தனர்.கோபமடைந்த மண்டலக் குழு தலைவர், 'வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் எந்தெந்த பணிகள் சேர்க்கப்பட்டுள்ளது என தெரிந்துதான் இங்கு உட்கார்ந்திருக்கிறோம். மழுப்பாமல் பதிலளிக்கணும்' என, கண்டித்தார்.மண்டல உதவி கமிஷனரும், 'பரிந்துரைத்த பணிகளை சொல்லக் கூடாது. நடவடிக்கையை குறிப்பிட வேண்டும்' என, எச்சரித்தார். மூத்த நிருபர் ஒருவர், 'வழக்கம் போல பூசி மழுப்பும் பதிலை அளிக்க முயன்ற அதிகாரிகள், இப்ப வசமா மாட்டிக்கிட்டாங்க...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் கமுக்கமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி