உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / வீக்னசை சொல்லிட்டாரே!

வீக்னசை சொல்லிட்டாரே!

காஞ்சிபுரம், காரப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனையில், இறகு பந்து மைதானத்தை சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன், காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஒரு அணியாகவும், ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றொரு அணியாகவும், இறகு பந்து விளையாட களம் இறங்கினர்.இதில், அமைச்சர் சுப்பிரமணியன் பந்தை தவற விட்டுக் கொண்டே இருந்தார். இருப்பினும், அதிகாரிகளும், சுற்றியிருந்த தி.மு.க., நிர்வாகிகளும் அவரை உற்சாகப்படுத்தினர். அப்போது, 'நீங்கள் எவ்வளவு துாரம் என்னை ஓட சொன்னாலும், ஓடி விடுவேன். இந்த ஆட்டம் எனக்கு சரிப்பட்டு வராது...' என்று கூறி, அமைச்சர் சுப்பிரமணியன் நடையை கட்டினார்.கட்சி நிர்வாகி ஒருவர், 'அமைச்சர், தன் வீக்னசை இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை