உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேட்டி: அண்ணாமலை பேச்சால், பா.ஜ., 'டிபாசிட்' கூட வாங்கக்கூடாது என, அ.தி.மு.க., தொண்டர்கள் வெறியோடு வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அண்ணாமலை பக்குவம் இல்லாமல் பேசுகிறார். பா.ஜ.,வுக்கு அழிவு ஆரம்பமாகி விட்டது. பா.ஜ.,வையும், அண்ணாமலையையும் நாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.உண்மையில் வேலை செய்யுறாங்களா என்ன...? கோவை அ.தி.மு.க., முக்கிய புள்ளியே தேர்தல் களத்தில் அடக்கி வாசிப்பதாக தானே தகவல் வருது! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு: தி.மு.க., நினைத்திருந்தால் அ.தி.மு.க.,வை எதிர்த்து, பழனிசாமியை விமர்சித்து இந்த தேர்தலை இலகுவாக சந்தித்து வெற்றி பெற முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல் தேசத்தை மீட்க வேண்டும்; மக்களை காப்பாற்ற வேண்டும்; இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண் டும் என்ற பொறுப்புணர் வுடன் தான் ராகுலுடன் கைகோர்த்து களத்தை விரிவுபடுத்தி உள்ளார்.மேடைக்கு, மேடை பழனி சாமிக்கு புதுப்புது வார்த்தைகளால் முதல்வர் அர்ச்சனை செய்வதை இவர் கேட்கவில்லையா?தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு: 'இண்டியா' கூட்டணி அமைந்ததற்கு காரணம் ஸ்டாலின் என்பதால் அவர் மீது மோடி கோபப்படுகிறார். இந்த தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு அ.தி.மு.க., - பா.ஜ., இடையே போட்டி நடக்கிறது. பொய்யை மட்டுமே பேசுபவர் அண்ணாமலை. குன்றக்குடி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்தால் கூட அவரால் வெற்றி பெற முடியாது. இப்படி பேசிப் பேசியே அசட்டையாக இருந்து, அண்ணா மலை வெற்றிக்கு வித்திடாம இருந்தால் சரி!அ.தி.மு.க., பேச்சாளரும், நடிகையுமான கவுதமி பேட்டி: மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவரும், முழு மனதோடும், உறுதியோடும் செயல்படுபவராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது மக்களுக்கு செய்யும் அநியாயமாகவும், துரோகமாகவும் கருதப்படும். அரசியலில் மிகப்பெரிய கூட்டணி, மக்களோடு தான் இருக்க முடியும். அத்தகைய கூட்டணியை, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வைத்திருக்கிறார்.சீமான் மாதிரி கூட்டணியை எதிர்பார்க்காமல் மக்களோடு தான் கூட்டணின்னு பழனிசாமி சொல்லலியே... கூட்டணிக்கு கதவை திறந்து வைத்தும், யாரும் வராததால் தானே அப்படி சொல்கிறார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை