உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு: தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைவது உறுதி என்பது தெரிந்து தான், மோடி இப்படி எல்லாம் பேசுகிறார். தற்போது, அவரது முகத்தில் தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான், தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசுகிறார். மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை.அது சரி... சர்ச்சையாக பேசுவோருக்கு ஒரு போட்டி வைத்தால் சாம்பியன் பட்டம் வாங்குறவரே இவரா தான் இருப்பார்! தமிழக காங்., சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகம்மது ஆரீப் அறிக்கை: முதல் கட்ட தேர்தலில் தமிழகத்தில் துவங்கிய மோடி எதிர்ப்பு அலை, நாடு முழுதும் வீசிக் கொண்டி ருக்கிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததை திரித்தும், அன்றயை பிரதமர் மன்மோகன்சிங் பேசியதை முன்பகுதியும், பின்பகுதியும்விட்டு இடையில் சில வார்த்தைகளை மேற்கோள் காட்டி, நடத்தை விதிமுறைகளை பிரதமர் மோடி அப்பட்டமாக மீறியிருக்கிறார்.வெட்டி, ஒட்டுற வேலையை எல்லாம் நம்ம திராவிட கட்சிகள் தானே எப்பவும் சிறப்பா செய்வாங்க!தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை தமிழக அரசு நாள்தோறும் கண்காணிக்க வேண்டும். எந்த நோக்கத்திற்காக, கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.எல்லா மாவட்டத்துலயும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு தர்றாங்களான்னு காங்கிரஸ் நிர்வாகிகளை வைத்து புள்ளி விபரம் திரட்டலாமே!பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கடலுார் மாவட்டம், வடலுார் சத்தியஞான சபை வளாகத்தில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் உள்ளதா என்பதை கண்டறிய தொல்லியல் துறை வல்லுனர் குழு ஆய்வு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆய்வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், வடலுாரில் கட்டுமான பணிகள் நடந்து வருவது கண்டிக்கத்தக்கது. உயர் நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமான பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.கோர்ட் தலையிட்ட பின்பும், நிறுத்தாம கட்டுமான வேலை செய்யு றாங்கன்னா பின்புலம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை