உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு:தமிழகத்தில் இரண்டரை ஆண்டு தி.மு.க., ஆட்சியின் திட்ட பணிகள், குடும்பத்தில் ஒருவருக்காவது சென்று சேர்ந்திருக்கும். இது குறித்து மக்களிடம் கட்சியினர் பேச வேண்டும். லோக்சபா தேர்தலில், 'இண்டியா' கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். பல கட்டணங்களை அரசு உயர்த்தியதால், குடும்பத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்காங்களே... இவங்க சொல்றதை கேட்பாங்களா? நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: நுாற்றுக்கணக்கான தத்துவ பேராசிரியர்கள், மொழியியல் ஆராய்ச்சியாளர்கள், கணித வல்லுனர்கள், நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகள் பலரை உருவாக்கிய பெருமையுடையது மாநில கல்லுாரி. அமைச்சர் உதயநிதி தொகுதியான சேப்பாக்கம் எல்லையில் கல்லுாரி உள்ளதால், அங்கு கட்சி கூட்டங்களுக்கு கல்லுாரி மாணவர்களை மூன்றாண்டுகளாக கட்டாயப்படுத்தி அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இது கண்டனத்துக்குரியது.இவர் சொன்ன வரிசையில், சிறந்த அரசியல்வாதிகள் பெயர் விடுபட்டு போச்சே... அவர்களை அப்படி உருவாக்கணும் என்ற நல்ல எண்ணத்துல அழைச்சுட்டு போயிருப்பாங்க!அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: பாலாற்றின் குறுக்கே, ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும், 22 அணைகளால் போதிய தண்ணீரின்றி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், வறட்சியில் உள்ளன. தற்போது கூடுதலாக அணை கட்ட முயற்சிக்கும், ஆந்திர அரசின் நடவடிக்கை, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில், ஆந்திர அரசும் தீவிரம் காட்டுவது கண்டனத்துக்குரியது.கர்நாடகா, கேரளா மட்டும் குடைச்சல் கொடுத்தால் எப்படி... நம்ம பங்கிற்கும் ஏதாச்சும் செய்வோம்னு ஜெகன் மோகன் களம் இறங்கிட்டாரோ?பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு: நாகர்கோவிலில் இருந்து 35 ரயில்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயிலும் இங்கிருந்து செல்கிறது. 4,000 கோடியில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் கூடுதல் ரயில்கள் நாகர்கோவில் வர வாய்ப்புள்ளது. மோடி மூன்றாவது முறை பிரதமரானதும், கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் துவங்கப்படும்.கடந்த பத்தாண்டுகளாக கிழக்கு கடற்கரை ரயில் பாதையை கண்டுக்காம விட்டுட்டு, இப்ப இவர் சொல்றதை மட்டும் நம்ப முடியுமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை