உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சாலையோரம் குவிந்த குப்பை தீயிட்டு எரிப்பதால் அவஸ்தை

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சி, நெல்லிக்குப்பம் சாலை விஷ்ணுபிரியா நகர் அருகில், குப்பை தேங்கி குவிந்து கிடக்கிறது.அதை அகற்றாமல் தொடர்ந்து தீயிட்டு எரித்து வருகின்றனர். அதனால், அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக உள்ளது.வெளிவரும் கரும்புகையால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் அப்பகுதிவாசிகளும் மூச்சுத் திணறி தவிக்கின்றனர்.எனவே, இப்பகுதியில் தேங்கும் குப்பையை உடனுக்குடன் அகற்ற, காயரம்பேடு ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.விமலா, விஷ்ணுபிரியா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை